நினைத்ததை முடித்த 'சகலகலா வல்லவன்'.. கமல் கைகளில் தவழும் கொங்கு 'பவர்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் முக்கிய சக்தியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்து கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வருகிறது.

Recommended Video

    kamal Haasan போடும் முதல் கையெழுத்து இது தான் - Makkal Needhi Maiam Mahendran | Oneindia Tamil

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடத்தில் வெற்றிப் பெறுவதை விட, அதிக வாக்கு சதவிகிதம் பெற வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

    திமுகவோ, அதிமுகவோ யார் வென்றாலும், தான் ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே கமல்ஹாசனின் டார்கெட். ஒவ்வொரு தொகுதியிலும் தங்களுடைய வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பிரிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

     மூன்றாம் இடம்

    மூன்றாம் இடம்

    அந்த வகையில், கொண்டு மண்டலத்தில் கமல்ஹாசன் நினைப்பதைப் போலவே, மக்கள் நீதி மய்யம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறது என்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. சத்தியம் டிவி கருத்துக்கணிப்பின் படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவினாலும், 10 சதவிகித வாக்குகளுடன் அங்கு மூன்றாம் இடம் பிடித்திருப்பது மக்கள் நீதி மய்யம் தான்.

     கடும் சவால் தரும் கமல்

    கடும் சவால் தரும் கமல்

    அதேபோல், சூலூர் தொகுதியில் 12 சதவிகித வாக்குகளுடன் மநீம மூன்றாம் இடம் பிடித்துள்ளது. கவுண்டம்பாளையத்தில் 8 சதவிகித வாக்குகளின் மநீம மூன்றாமிடம் பிடிக்கிறது. கோவை வடக்கு தொகுதியில், 12 சதவிகித வாக்குகளுடன் மூன்றாமிடம், தொண்டாமுத்தூரில் 8 சதவிகித வாக்குகளுடன் மூன்றாமிடம், கோவை தெற்கில்.. அதாவது கமல்ஹாசன் நேரடியாக களமிறங்கும் இந்த தொகுதியில் 34 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. பாஜகவும் இங்கு 34 சதவிகிதம் பெற்றுள்ளது.

     கலங்கும் கழகங்கள்

    கலங்கும் கழகங்கள்

    சிங்காநல்லூரில் 6 சதவிகித வாக்குகளுடன் மூன்றாமிடமும், கிணத்துக்கடவில் 6 சதவிகித வாக்குகளுடன் நான்காம் இடமும், பொள்ளாச்சியில் 7 சதவிகித வாக்குகளுடன் 3ம் இடமும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கொண்டு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளது. கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் செய்ய நினைத்தது, அட்லீஸ்ட் கொண்டு மண்டலத்திலாவது அரங்கேறி இருக்கிறது. அப்படித் தான் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

     சீமான் செகண்ட்

    சீமான் செகண்ட்

    சீமான் ஒருபக்கம் தனது வளர்ச்சியை ஆர்ப்பாட்டமாக முன்னெடுத்துச் செல்ல, கமல்ஹாசன் சப்தமின்றி, டார்ச் லைட் ஒளியைப் போல் ஆழமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, முதல் முறை வாக்காளர்கள் மத்தியி்ல முதல்வர் சாய்ஸாக கமல்ஹாசனும், 2வது சாய்ஸாக சீமானும் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. பேச்சில் விதிக்கரான சீமான் நோக்கி இளைஞர்கள் படையெடுக்கும் அதே நேரத்தில் கமல்ஹாசனின் சிந்தனை, கருத்தியல், பிராக்டிக்கலான வாக்குறுதிகள், ஊழல் ஒழிப்பு, திராவிட கட்சிகள் எதிர்ப்பு போன்றவற்றை மற்றொரு தரப்பினர் ஆதரிக்கின்றனர். யார் கண்டா... 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில், தேர்தல் களமே கமல் vs சீமான் என்றிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+