'எங்களுடன் வாருங்கள்'... மநீம பகிரங்க அழைப்பு - மனம் மாறுமா காங்கிரஸ்?
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதால், தங்களுடன் இணையுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும், வேண்டா விருப்போடு பயணம் செய்வதை காண முடிகிறது. விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டாலும், 'பாஜக எதிர்ப்பு' என்ற ஒற்றைப் புள்ளியில் வேறு வழியின்றி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.

காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நேற்று, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுக நம்மை சுத்தமாக மதிக்கவில்லை என்று கூறி கண்ணீர் விட்டே அழுதுவிட்டார். அது குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு 'கண்கள் இருந்தால் கண்ணீர் வரத் தான் செய்யும்' என்று பூசி மொழுவினார்.
பேச்சுவார்த்தை தொடங்கிய போது, காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் வரை கேட்கப்பட்டது. பிறகு 30 தொகுதிகள் வரை அவர்கள் இறங்கி வந்தனர். அதேசமயம், பிகே ரிப்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கிய திமுகவோ, 15-ல் தொடங்கி, 18 தொகுதிகள் வரை வந்துள்ளது.
இதனிடையே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் அணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், 'மக்கள் மாறுதலுக்கு தயாராகிவிட்டனர். காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்தால் வந்தால் அவர்களுக்கு நல்லது. ஆனால், எங்களுடன் வருகிறார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதை இப்போது கூறமுடியாது' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸை தங்கள் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் அழைத்திருந்த நிலையில், திமுக தரப்புடன் காங்கிரஸ் மல்லுக்கட்டி வருவதால், மீண்டும் நேரடியாக அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications