மாஸ்டர்மைண்ட் போட்டுத்தந்த "ரூட்".. டெல்லிக்கு 500 பேரை அனுப்பும் கமல்ஹாசன்.. ஆஹா.. மநீம கலக்குதே!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் 500 பேர் கொண்ட ஸ்பெஷல் குழுவை டெல்லிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் தேர்தலுக்கு பின்பாக அந்த கட்சி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்த நிர்வாகிகள் பலர் திமுகவிலும், அதிமுகவிலும், சில பாஜகவிலும் கூட இணைந்தனர். கட்சியின் டாப் நிர்வாகிகள் பலர் வெளியேறினர்.

கமல்ஹாசன்
இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது. கடந்த 16ம் தேதி கமல்ஹாசன் இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் கூட்டணி பற்றி பேசப்பட்டு இருக்கிறது. யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களை கேட்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். பாஜக தரப்பிற்கு செல்வது சரியாக, காங்கிரஸ் கூட்டணியில் இணைவது சரியா என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

ஆலோசனை
எம்பி தேர்தலில் போட்டியிடலாம் என்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதாவது எம்பி தேர்தலில் கூட்டணி சார்பாக நின்று டெல்லிக்கு செல்லலாமா என்றும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். இந்த கூட்டத்தை நடத்தும்படி சொன்னது ஒரு அரசியல் ஆலோசகர் ஆவார். அவர்தான் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துங்கள். மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்தால் நன்றாக இருக்கும். இதை கட்சி கூட்டத்தில் சொல்லி அவர்களின் கருத்துக்களை பெறுங்கள். நீங்கள் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும், என்று ஆலோசனை வழங்கி இருக்கிறாராம்.

மநீம
இதை கேட்டுத்தான் கமல்ஹாசன் அந்த கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்வது தொடர்பாகவும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்தே கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர்.. நாங்கள் என்ன கூட்டணி வைக்க போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரிய வரும். நான் என்ன திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நாங்கள் கலந்து கொள்வோம் என்றும் கூறினார். அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளார். 100வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைய உள்ளது. இதில் 24ம் தேதி கமல்ஹாசன் டெல்லியில் கலந்து கொள்ள இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.

கூட்டம்
இதற்காக பெரிய அணியை கமல்ஹாசன் தேர்வு செய்து வருகிறார். பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்று பலர் அடங்கிய 500 பேர் கொண்ட குழுவை இதற்காக கமல்ஹாசன் இறக்க உள்ளாராம். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் இவர்களை கமல்ஹாசன் தேர்வு செய்ய இருக்கிறாராம். இவர்களை டெல்லிக்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகும் விதமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications