மாபெரும் வெற்றியை நோக்கி திமுக? அதிமுகவை விட மூன்று மடங்கு இடங்களில் முன்னிலை... மாலை முரசு சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாலை முரசு தற்போது வரை 208 தொகுதிகளின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், அதில் 136 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 47 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல திமுகவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளது.

இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் களமிறங்குகிறது. அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்குகிறது.

மாலை முரசு சர்வே

மாலை முரசு சர்வே

இந்தத் தேர்தல் தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. மாலை முரசு தொலைக்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது வருகிறது. தினசி 26 தொகுதிகள் என்ற வீதத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகளைத் தெரிவித்து வருகிறது. இன்று சென்னை மற்றும் சென்னை புறநகர் தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு வெளியிட்டது.

சென்னை புறநகர்

சென்னை புறநகர்

சென்னை புறநகர்ப் பகுதியிலுள்ள சில தொகுதிகளில் அதிமுக அதிருப்தி அலை இருப்பதாக மாலை முரசு தெரிவித்தது. இருப்பினும், பாமகவுடன் அமைத்துள்ள கூட்டணி அதிமுகவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. பாமகவின் வாக்குகள் அப்படியே அதிமுகவிற்கு வருவதால் அங்குச் சற்று போட்டி ஏற்பட்டுள்ளது

சென்னை யாருக்கு

சென்னை யாருக்கு

அதேபோல நேரம் சென்னையில் திமுகவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஊர்பகுதிகளில் சற்று வலுவாக இருந்த அமமுக சென்னையில் அதிகப்படியான வாக்குகளைப் பெற முடியவில்லை. மாறாக நகர் புறங்களில் பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

திமுக அதிகம்

திமுக அதிகம்

இன்று மொத்தம் 25 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது மாலை முரசு. அதில் திமுக+ 19 தொகுதிகளிலும், அதிமுக+ 4 தொகுதிகளிலும் வெல்லும். 2 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் திமுக ஆதிக்கம்

தொடரும் திமுக ஆதிக்கம்

இதுவரை 208 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது மாலை முரசு. அதில் திமுக+ 136 தொகுதிகளிலும், அதிமுக+ 47 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல அமமுக கூட்டணி ஒரு தொகுதியில் வெல்லும் என்று மாலை முரசு தெரிவித்துள்ளது. மேலும். 24 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+