முதல்வரின் சேலம் மாவட்டத்தில் அதிமுகவை முந்தும் திமுக... முரசு கருத்துக்கணிப்பு முடிவுகள்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே திமுக அதிக இடங்களில் வெல்லும் என்று மாலை முரசு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் இடையே இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றன. போட்டிகள் கடுமையாக உள்ளதால் இந்த முறை குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை முரசு கருத்துக்கணிப்பு
இந்தச் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. ஆறாம் நாளான இன்றும் 26 தொகுதிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை முரசு வெளியிட்டுள்ளது. அதில் நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வாக்குகளை 43% பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக 42% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அமமுக 6% நாம் தமிழர் 3% மக்கள் நீதி மய்யம் 2% வாக்குகளையும் பெறும்.

இழுபறி
ராசிபுரம் தொகுதியில் இழுபறி நிலவுகிறது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் 43% வாக்குகளை பெறும். அமமுக 5% நாம் தமிழர் 4% மக்கள் நீதி மய்யம் 3% வாக்குகளையும் பெறும். அதேபோல வீரபாண்டி தொகுதியிலும் இழுபறி நிலவுகிறது. இங்கு திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் 41% வாக்குகளை பெறும். வீரபாண்டி தொகுதியில் அதிமுக முக்கிய பிரமுகர் தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார். இது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதேநேரம் பாமக ஆதரவு இங்கு அதிமுகவிற்கு கிடைத்துள்ளது.

சேலம் யாருக்கு
சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக 45% வாக்குகளையும் திமுக 41% வாக்குகளையும் பெறும். சேலம் வடக்கு தொகுதியில் திமுக 43% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 39% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். சேலம் மேற்கு தொகுதியில் இழுபறி நிலவுகிறது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் 42% வாக்குகளை பெறும். அமமுக 5% நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலா 4% வாக்குகளையும் பெறும்.

கடும் போட்டி
சங்ககிரி தொகுதியில் அதிமுக 47% வாக்குகளை பெற்று வெல்லும். திமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். மேட்டூர் தொகுதியில் திமுக 48% வாக்குகளை பெறும். அதிமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். ஓமலூர் தொகுதியில் அதிமுக 43% வாக்குகளை பெறும். காங்கிரஸ் (திமுக+) 42% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும்.

ஏற்காட்டில் திமுக
ஏற்காடு தொகுதியில் திமுக 45% வாக்குகளை பெறும் அதிமுக 39% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். ஆத்தூர் தொகுதியில் திமுக 45% வாக்குகளை பெறும். அதிமுக 41% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பெறும். கெங்கவல்லி தொகுதியில் இழுபறி நிலவுகிறது . திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் 46% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு அதிகம்
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 12 தொகுதிகளின் முடிவுகளை இன்று மாலை முரசு வெளியிட்டது. அதில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4 தொகுதிகளில் இழுபறி நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே திமுக அதிக இடங்களில் வெல்லும் என்று மாலை முரசு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications