Exclusive: கள்ளகுறிச்சி போலீஸின் குலைநடுங்க வைக்கும் கஸ்டடி சித்ரவதைகள்.. கதறும் 'குறவர்' செல்வம்
சென்னை: ஜெய்பீம், விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களில் போலீசார் கஸ்டடியில் சந்தேக நபர்களை கொடூரமாக குலைநடுங்க வைக்கும் சித்திரவதைகளுக்குள்ளாக்குவர். அப்படியே கொடூர சித்ரவதையை கள்ளக்குறிச்சி போலீசார் கட்டவிழ்த்துவிட்டதை குறவர் சமூகத்தைச் சேர்ந்த செல்வம் கதறலுடன் விவரித்துள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி கொங்கராபாளையத்தை சேர்ந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருப்பில் போலீசார் உள்ளே நுழைந்து முதலில் 2 பேரை கைது செய்தது. பின்னர் ஒருவர் அடுத்ததாக மேலும் இருவர் என மொத்தம் 5 பேரை கைது செய்தது.
இந்த 5 பேரும் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் கஸ்டடியில் 3 நாட்களாக இருந்த இவர்கள் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக நாம் ஒன் இந்தியா இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

ஜெய்பீம் செங்கேணி
மேலும் இந்த 5 பேரில் சக்திவேலுவின் மனைவி கர்ப்பிணி. அவர் கண்ணீர் கதறலுடன் பேட்டி அளித்தது அப்படியே ஜெய்பீம் திரைப்படத்தின் செங்கேணி பாத்திரத்தை கண்முன்பே கொண்டு வந்தது. இதனையடுத்து விளக்கம் அளித்த போலீசார் 5 பேரில் 2 பேரை குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டோம்; 3 பேரை 13 கொள்ளை வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைக்கிறோம் என்றனர். ஆனால் 2 பேரை மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் சக்திவேல் கதி என்ன என்பது தெரியாமல் உறவினர்கள் கதறி வருகின்றனர்.

போலீஸ் சித்திரவதை
இந்நிலையில் போலீசாரால் விடுவிக்கப்பட்ட செல்வம் என்பவர் போலீசார் நடத்திய சித்திரவதைகளை விவரிக்க விவரிக்க ஜெய்பீம், விசாரணை போன்ற சினிமா காட்சிகள் நிஜம் என்பதை நிரூபிக்கின்றன. குறவர் சமூகத்தைச் சேர்ந்த செல்வம் அளித்த கதறல் பேட்டியின் எழுத்து வடிவம்: அந்த ரோட்டுல என் பொண்டாட்டியும் நானும்தான் போயிருக்கிறோம் வந்திருக்கிறோம்.. நான் தனியாகூட போனது இல்லை.. நானும் பொண்டாட்டியும் வியாபாரத்துக்கு போவோம் என்று போலீசில் சொன்னேன். அப்ப எல்லாம் என்னை போலீஸ் அடிக்கலைங்க.. அப்படியே செவத்துக்கு பக்கம் திரும்பிக்கன்னு அவனை சொன்னாங்க..

கட்ட விரலை கட்டிவிட்டு சித்ரவதை
சேர்ல ஏறி அவனை நிக்கவெச்சு ரெண்டு கட்ட விரலையும் தூணில் கட்டிவிடுறாங்க.. அப்புறம் சேரை எடுத்துட்டு இறக்கிவிடுறாங்க.. சொல்லும்போதே உயிர் போயிடுதுங்க... அப்படியே நாடி நரம்பெல்லாம் இழுக்குது.. அந்தமாதிரி செஞ்சாங்க... கூட இருந்த அவங்களை அப்படி செஞ்சது எனக்கே பேச்சு மூச்சு இல்லை.. தர்மராஜையும் பிரகாஷையும் அப்படி செஞ்சாங்க.. அதுக்கு பிறகுதான் சக்திவேலையும் இன்னொருத்தரையும் பிடிச்சுட்டு வந்தாங்க.

நடுகாட்டில் கண்ணை கட்டிவிட்டு
அப்புறம் பார்க்க விடாம கண்ணை கட்டிறாங்க.. தெரியவும் மாட்டீங்கது.. இருட்டா இருக்குது.. எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியலை.. பார்த்தா நடு பாரஸ்ட் காடா இருக்கு. சுத்தி முள்காடா இருக்கு.. அங்க வெச்சுட்டு கேட்குறாங்க.. கண்ணையும் தொறக்க விடமாட்டேங்கிறாங்க.. அத மாதிரி டார்ச்சர் பண்றாங்க.. நீங்க எல்லாம் திருடன் பொண்டாட்டிதான்னு சொல்றாங்க. தஞ்சாவூரில் இருந்து பொண்ணு ஊருன்னு பொழைக்க வந்தோம்.. தஞ்சாவூர்னாலே திருடன்னு சொல்றாங்க.. தஞ்சாவூர்னா பொண்ணும் கொடுக்க கூடாதாம்.. விருந்தாளியை பார்க்கவும் வரக் கூடாதாம்.. அது மாதிரி டார்ச்சர் பண்றாங்க.. இவ்வாறு செல்வம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications