32 ஆண்டு பொது வாழ்க்கையை சிறுமைப்படுத்திவிட்டார்.. வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை துரோகி எனக் கூறி சிறுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டி, நீதி கேட்டு மல்லை சத்யா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் துணைப் பொதுச் செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த மதிமுக பொதுக்குழுவில், மல்லை சத்யா துரை வைகோவை விமர்சித்து பேசினார். இதனையடுத்து துரை வைகோ கோபமடைந்து வெளியேறினார். இதன் காரணமாக துரை வைகோ- மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன்பிறகு வைகோ தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தான் வைகோ, மல்லை சத்யாவை விமர்சித்து கட்சி கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக அக்கட்சியின் மல்லை சத்யா குற்றம் சாட்டியிருந்தார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்றும் வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் மல்லை சத்யா.
இந்த நிகழ்வு, மதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுவின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது படங்களை கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போரட்டம் நடத்தவுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையருக்கு மனு கொடுத்துள்ளார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையும், காலை 10 மணி முதல் 5 மணி வரையில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் வகையில் துரோகி என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய மல்லை சத்யா, நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications