துரை வைகோதான் மதிமுகவுக்கும், வைகோவுக்கும் எதிரியாக வருவார்.. மல்லை சத்யா பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: மதிமுகவுக்கும், வைகோவுக்கும், துரை வைகோதான் எதிரியாக வருவார் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ - துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையே கருத்து யுத்தம் நடந்து வரும் சூழலில் மல்லை சத்யா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் தற்போது புயல் வீசிக் கொண்டிருக்கிறது. வைகோவுக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த மல்லை சத்யா மீது வைகோவே அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை அடுக்கியதைத் தொடர்ந்து, மல்லை சத்யா, மதிமுகவில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் பற்றி வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுடன் மல்லை சத்யா தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார் என்னை பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடன் மல்லை சத்யா மிக நெருக்கமாக பழகி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து மல்லை சத்யா திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்தார் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
வைகோவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லை சத்யா வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அதில், மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார் எனக் கூறினார்.
தொடர்ந்து, மதிமுக விவகாரம் அனலைக் கிளப்பி வருகிறது. மல்லை சத்யா, திமுகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன. வைகோ பற்றியும், துரை வைகோ பற்றியும் பொது வெளியில் பேசி வருகிறார் மல்லை சத்யா. அதேசமயம், மதிமுகவில் மல்லை சத்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள மல்லை சத்யா, "கட்சியின் தலைவர் வைகோ. அவரது மகனுக்கு வாய்ப்பு கொடுப்பதை, யாராவது எதிர்த்தால் அந்த கட்சியில் இருக்க முடியுமா? எனவே, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். மாற்றுக் கருத்து இருந்தாலும், சொல்ல முடியாமல் சிலர் உள்ளே இருக்கிறார்கள்.
துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும். அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் கூட பேச முடியும். கடந்த மே மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஜூலியஸ் சீசர் - புரூட்டஸ், ஏசு கிறிஸ்து - யூதாஸ், வீரபாண்டிய கட்டபொம்மன் - எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.
துரை வைகோ அரசியல் பாலபாடம் கூட படித்ததில்லை. அரசியலில் அவர் ஒரு எல்கேஜி. அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் அனைத்தும், ஒரே ரத்தத்தில் வந்தவர்கள் என்பதை உணரவில்லை. ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும்.
எனவே, மதிமுகவை கட்டி எழுப்பிய வைகோவுக்கு, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த நீங்கள் தான் துரோகியாக இருப்பீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கும் கூட்டமல்ல. களத்தில் படைத் தளபதியாக நின்று மாண்டு போகிறவர்கள். எனவே, மதிமுகவுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார்." எனத் தெரிவித்துள்ளார் வைகோ.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications