Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமல்லபுரம் கடற்கரையில் கருகருன்னு 15 கிலோ எடையில் உருவம்.. கடல் ஆமைகளால் பீச்சில் மலைத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆலிவ் ரிட்லி எனப்படும் கடல் ஆமைகள் அழிந்து வரும் உயிரினமாகவே கருதப்படுகிறது.. எனினும் சமீப காலமாக சென்னை, செங்கல்பட்டு கடற்கரைகளில் இந்த கடல் ஆமைகள் தென்பட்டு வருகிறது.. சிலசமயம் கடல் ஆமைகள் முட்டையிடுவதும் நடக்கிறது, சிலசமயம் கடல் ஆமைகள் இறந்து கடலோரம் ஒதுங்கி கிடப்பதும் நடக்கிறது.. இன்று அதிகாலையில், , மகாபலிபுரம் கடற்கரையில் கடல் ஆமைகள் பற்றின செய்திகள் வெளியாகி உள்ளன,

அழிவின் விளிம்பில் உள்ள இந்த ஆமை இனத்தை பாதுகாக்க இந்தியா முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... ஆலிவ் ரிட்லி ஆமைகளை பொறுத்தவரை நீண்ட தூரம் பயணம் செய்து, தாங்கள் பிறந்த கடற்கரைக்கே மீண்டும் வந்து முட்டையிடும் தனிச்சிறப்பைக் கொண்டவை. ஒவ்வொரு முறையும் சுமார் 100 முட்டைகள் வரை இடுகின்றன.

Mahabalipuram Beach 5 Km of Mystery Marine Creatures Wash Ashore 5 15

பெசன்ட்நகர் பீச்

சென்னை பெசன்ட் நகர் முதல் நீலாங்கரை வரையிலான கடற்கரைப் பகுதி, ஒடிசாவின் ருஷிகுல்யா மற்றும் கஹிர்மாதா கடற்கரைகளைத் தவிர, கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கியமான சில முட்டையிடும் இடங்களில் ஒன்றாகும்

பொதுவாக, ஜனவரி முதல் மார்ச் வரை கடல் ஆமைகள் கரை ஏறி, மணலில் குழி தோண்டி முட்டையிட்டு மீண்டும் கடலுக்குள் திரும்புவது வழக்கம். ஒவ்வொரு கடல் ஆமையும் ஒரே முறையில் சுமார் 140 முதல் 170 வரை முட்டைகள் இடும். இப்படி இடப்படும் முட்டைகள் நாய்கள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களால் சேதமடையாமல் இருக்க, வனத்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பெசன்ட் நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் பழவேற்காடு ஆகிய கடற்கரைப் பகுதிகளில் கடல் ஆமை முட்டைகள் பாதுகாப்புக்கான பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அதிக அளவில் ஆமைகள் கரை ஏறி முட்டையிடும் முக்கிய இடமாக பெசன்ட் நகர் கடற்கரை விளங்குகிறது.

நீலாங்கரை கடற்கரை ஆமைகள்

கடந்த 2020ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 வரை கடல் ஆமைகள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து, மொத்தமாக 6,000 முதல் 12,000 வரை முட்டைகள் இட்டு சென்றுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அந்தவகையில் இந்த 2026ம் ஆண்டு துவங்கியதுமே அதிக எண்ணிக்கையில் ஆமைகள் கரை ஏறும் என எதிர்பார்க்கப்பட்டது..

அதற்கேற்ப, முட்டைகள் பாதுகாப்பு மற்றும் ஆமைகள் பாதுகாப்பாக கடலுக்குள் திரும்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடற்கரைப் பகுதிகளில் கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டனர்..

எதிர்பார்த்தபடியே கடந்த 6ம் தேதி அதிகாலை பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளுக்கு அருகே முட்டைகள் இருந்துள்ளன.. இந்த தகவல் கிடைத்ததும், வனத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடற்கரையில் தென்பட்ட முட்டைகளை பாதுகாப்பிற்காக பெசன்ட் நகர் இனப்பெருக்க மையத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றனர்...

இந்நிலையில் மாமல்லபுரம் கடல் பகுதியில் முக்கிய நிகழ்வு இன்று அதிகாலை நடந்துள்ளது.. ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை 4 மாத காலம் சீதோஷ்ண மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் கடல்நீர் குளிர்ச்சியடைந்து, கடல்வாழ் உயிரினங்கள் அந்த நிலையை தாங்க முடியாமல் உயிரிழந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

மகாபலிபுரம் 15 கிலோ எடை

அந்தவகையில் மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 5 கிலோமீட்டர் நீளத்தில், ஆங்காங்கே சுமார் 15 கிலோ எடை கொண்ட 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன.

காலையில் வாக்கிங் போனவர்களும், சுற்றுலா பயணிகளும், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் கடல் ஆமைகள் உயிரிழந்ததை பார்த்ததால், இது சுனாமி எச்சரிக்கையா என்ற அச்சமும் சிலரிடையே ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் சொல்லும்போது, நவம்பர் முதல் பிப்ரவரி வரை கடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்களின் காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது..கடலில் கலக்கும் நச்சுக் கழிவுகள், அலைகளுடன் அடித்து வரப்படும் குப்பைகள், லாஞ்சர் படகுகள் மற்றும் பெரிய கப்பல்களிலிருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளை கடல் ஆமைகள் தவறுதலாக உட்கொள்ளும்போதும் இப்படியான உயிரிழப்பு ஏற்பட்டு கரை ஒதுங்கும் நிலை உருவாகிறது.,

இப்போது கடலில் வீசும் சுழற்காற்றும் இந்த உயிரிழப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்... கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதாலும் இப்படியான உயிரிழப்பு நடந்திருக்கலாம்.. எனினும் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+