'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி
Recommended Video
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் புதுப்பொலிவுடன் காணப்பட்ட மாமல்லபுரம் மறுபடியும் குப்பை கூளமாக மாறிவிட்டது.
கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும், மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டில் சந்தித்தனர். இதையொட்டி 8 தேதி முதலே சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரம் செல்ல தடை விதிக்கப்பட்டு, அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அந்த நகரமே புதுப்பொலிவுடன் மாறியது.

புத்தம் பொலிவுடன் காணப்படும் மாமல்லபுரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை சுற்றுலா பயணிகளுக்கு பெருக்கெடுத்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாமல்லபுரம் நோக்கி படையெடுத்து சுற்றுலா பயணிகளால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கூட்டம் அலைமோதியது. ஆனால் வருகை தந்த, சுற்றுலா பயணிகள் குப்பைகளை கண்ட இடத்திலும் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
உணவுப்பொருட்கள் மற்றும் பிற குப்பை பொருட்களை குப்பை தொட்டியில் போடாமல், நினைத்த இடத்திலெல்லாம் வீசிவிட்டு சென்றனர். இதனால் இன்றைய தினம் மாமல்லபுரத்தை பார்த்தால், வெறும் குப்பையாக காட்சி அளிக்கிறது.
தூய்மையின் அவசியம் முக்கியம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கோவளம் கடற்கரையில் அவரே குப்பைகளை தூய்மையும் செய்தார். இவ்வளவு, நடந்த பிறகும் நமது மக்கள், ஏதாவது சாக்கு போக்கு சொல்கிறார்களே தவிர, தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதாக இல்லை என்பதற்கு மாமல்லபுரம் ஒரு சாட்சி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications