சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித் ஷாவை அதிர வைத்து 8 கிமீ.. உட்கார்ந்தபடியே கேம் ஆடும் மம்தா.. ப்பா செம சாணக்கியத்தனம்!

Google Oneindia Tamil News

சென்னை: உட்கார்ந்தபடியே.. பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே டெக்னிக்கை பயன்படுத்தி மக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி சிறப்பாக ஸ்கோர் செய்து வருகிறார். இதற்கு எப்படி கவுண்டர் அட்டாக் கொடுப்பது என்று தெரியாமல் அமித் ஷா குழம்பி போய் உள்ளார்.

அவ்வளவுதான் மம்தா கதை முடிந்தது.. இனி மேற்கு வங்கத்தில் பாஜகதான்.. ஏன் நந்திகிராமிலேயே மம்தா பானர்ஜி ஜெயிக்க முடியாது என்றெல்லாம் கணிப்புகள் வந்த போதுதான் அந்த சம்பவம் நடந்தது. சில நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜி நந்திகிராமில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பும் போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

காருக்கு அருகில் நின்று செய்தியாளர்களை சந்தித்த போது, மம்தாவை சிலர் தள்ளிவிட.. கார் கதவு மம்தா பானர்ஜி மீது மோதி, அவர் கீழே விழுந்தார். இதில் மம்தா பானர்ஜியின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.

தேர்தல்

தேர்தல்

பாஜக செய்த சதிதான் இந்த தாக்குதல். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர். இவர்களை சும்மா விட மாட்டேன் என்று சபதம் போட்டார் மம்தா பானர்ஜி. அதன்பின் பெட் ரெஸ்டில் இருந்த மம்தா பானர்ஜி தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இவருக்கு எப்போது காலில் காயம் ஏற்பட்டதோ அப்போதில் இருந்து மக்கள் மத்தியில் அனுதாப அலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தல் சமயத்தில் அவ்வப்போது பிரதமர் மோடி பிரச்சாரத்தில் கண்ணீர் விடுவார். இது வடஇந்தியாவில் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெறும்.

வரவேற்பு

வரவேற்பு

அதேபோல்தான் தற்போது மம்தா பானர்ஜியும் தனக்கு காலில் ஏற்பட்டு இருக்கும் காயத்தை அப்படியே வாக்குகளாக மாற்றி வருகிறார். லேசாக கீழே விழுந்தாலும் இன்னமும் வீல் சேரில்தான் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார். போகிற இடங்களுக்கு எல்லாம் மம்தா பானர்ஜி வீல் சேரில் இருந்தபடியே கெத்தாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பரிதாபம்

பரிதாபம்

சென்டிமென்ட் அலையை அப்படியே தன் பக்கம் திருப்பி .. போகிற இடங்களில் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைக்கிறார். மம்தா பானர்ஜியை தங்களின் அக்காவாக பார்த்து பழகிய மக்களுக்கு.. இவர் இப்படி பரிதாபமாக வீல் சேரில் இருப்பதை பார்த்து பெரிய அளவில் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. சுற்றி எல்லோரும் நிற்க மம்தா பானர்ஜி மட்டும் வீல் சேரில் அமர்ந்து இருப்பதை பார்ப்பதே பல வங்காளிகளுக்கு உணர்ச்சியை உஷ்ணமாக்கி உள்ளது.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

என்னுடைய உயிருக்கே ஆபத்து உள்ளது.. ஆனாலும் நான் மக்களுக்காக நிற்பேன்.. என்று மம்தா பானர்ஜியும் போகிற இடங்களில் எல்லாம் தீவிரமாக கூறி வருகிறார். மம்தாவை இப்படி பார்க்க நந்திகிராம் தங்களுக்கு கம்யூனிச அரசை எதிர்த்து போராடிய அதே பழைய மம்தாவை பார்த்தது போல வங்கத்து மக்கள் பொங்கி வழிகிறார்கள்!

நந்திகிராம்

நந்திகிராம்

அதிலும் இன்று நந்திகிராமில் "பாதமே தரையில் படாமல்" 8 கிலோ மீட்டருக்கு மம்தா பானர்ஜி "பாத யாத்திரை" மேற்கொண்டார். 8 கிலோ மீட்டருக்கு இவர் வீல் சேரில் நடத்திய பேரணி பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது . வீல் சேரில் இவ்வளவு கஷ்டப்படுகிறாரே எங்கள் தீதி என்று மக்கள் உணர்ச்சிவசப்படும் அளவுக்கு இன்றைய பேரணி அமைந்துள்ளது.

சாணக்யத்தனம்

சாணக்யத்தனம்

முடிந்த அளவு அனுதாப அலைகளை தன் பக்கம் திருப்பும் வகையில் பார்த்து பார்த்து மம்தா பானர்ஜி வேலைகளை செய்கிறார்.மக்கள் உணர்ச்சியை வாக்குகளாக மாற்றும் சாணக்கியத்தனம்தான் இது!

பாஜக

பாஜக

பாஜகவோ இவருக்கு எப்படி பதில் கொடுப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறது. மம்தா பானர்ஜி நாடகம் ஆடுகிறார் , நடிக்கிறார் என்று சொல்வதை தவிர வேறு விஷயம் எதுவும் பாஜகவிடம் தற்போது இல்லை. போகிற போக்கை பார்த்தால் மம்தா பானர்ஜி வீல் சேரில் உட்கார்ந்தபடியே மீண்டும் முதல்வர் சேருக்கு மாறிவிடுவார் போல தெரிகிறது!

English summary
CM Mamata Banerjee wheel chair politics changes in image in West Bengal Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X