சென்னை தி.நகர் ஆகாய நடைபாதையில் தினசரி பயணிப்பவரா? சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை : மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து, தி.நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆகாய மார்க்கமாக மாம்பலம் ரயில் நிலையம் வரை 28 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் 570 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் ஆகாய நடைமேடை அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் துவக்கி வைத்தார்.

இந்த ஆகாய நடைபாதையில் நகரும் படிக்கட்டுகள், மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரங்கநாதன் தெருவிலும், தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் உஸ்மான் சாலை என இரண்டு இடத்திலும் தலா ஒரு மின் தூக்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாட்களுக்கு நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை நகரும் படிகட்டுகள் (ம) மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 16.05.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இவற்றில் நகரும் படிகட்டுகள் (ம) மின்தூக்கிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, 13.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை நகரும் படிகட்டுகள், 14.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை தெற்கு உஸ்மான் சாலை மின்தூக்கி மற்றும் 14.06.2023 அன்று மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை மார்க்கெட் சாலை இரயில் நிலைய மின்தூக்கி ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் ஆகாய நடைபாதை மூடப்பட்டிருக்கும் எனவும், இப்பணி நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் வழக்கம் போல் படிக்கட்டுகளையும், நகரும் படிக்கட்டுகள் மூடப்பட்டிருப்பின் மின்தூக்கியையும், மின்தூக்கி மூடப்பட்டிருப்பின் நகரும் படிக்கட்டுகளையும் பயன்படுத்தலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications