சென்னையில் உதயகுமாருக்கு உழைக்காமலேயே கொட்டிய பணம்.. ஒரே பொய்யில் 6 லட்சம் சம்பாத்தியம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்பாபு என்பவர் அரசு வேலைக்காக காத்திருந்தார். இவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த உதயகுமார் என்பவர் தனக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், தேர்வு எதுவும் எழுதாமல் நேரடியாக அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி, ரூ.6 லட்சத்தையும் சதீஷ்பாபுவிடம் இருந்து வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சில ஆயிரம் வேலைகளே ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிரப்பப்படுகிறது. இதனால் சிலர் அரசு வேலைக்கு சேர உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இதனை பயன்படுத்தி சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடிகள் நடக்கிறது.

எனவே அரசு வேலை வாங்கித் தருவதாக நடக்கும் மோசடிகளைத் தடுக்க, விழிப்புணர்வுடன் இருப்பது மற்றும் முறையான வழிமுறைகளைப் பின்பற்றுவது மிக அவசியம் ஆகும். எந்தவொரு இடைத்தரகரையும் நம்பாமல், அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புவதுதான் சிறந்த வழியாகும். ஆனால் இதை கவனிக்காமல், பலர் அரசு வேலைக்காக பணம் செலுத்தி ஏமாறுவது நடக்கிறது. சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 43 வயதாகும் சதீஷ்பாபு பட்டதாரி ஆவார். அரசு வேலைக்காக காத்திருந்தார். பள்ளிக்கரணையை சேர்ந்த 40 வயதாகும் உதயகுமார் என்பவர் தனக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், தேர்வு எதுவும் எழுதாமல் நேரடியாக அரசு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். அதற்காக ரூ.6 லட்சத்தையும் சதீஷ்பாபுவிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு பின்பு, அவர் அரசு வேலையும் வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சதீஷ்பாபு ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடி நபர் உதயகுமார் கைது செய்தனர். எனவே அரசு வேலைக்காக பணம் கட்டி மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாதீர்கள்.
மக்கள் அறிய வேண்டியவை: எந்தவொரு அரசுப் பணியையும் பெறுவதற்குப் பணம், லஞ்சம், அல்லது பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "வேலை உறுதியாகக் கிடைக்கும், இவ்வளவு பணம் கொடுங்கள்" என்று யாராவது கேட்டால், அது 100% மோசடி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய அனைத்து அறிவிப்புகளும், தேர்வு முடிவுகளும், நேர்காணல் அழைப்புகளும் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதேபோல் வேலை உறுதிசெய்யப்பட்டதாகக் கூறி அவர்கள் அளிக்கும் நியமன ஆணை உண்மையானதா என்பதை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு அதிகாரபூர்வமாக மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பி உறுதிப்படுத்த வேண்டும்.ஏனெனில் சிலர் அரசு வேலை அப்பாயிண்மெண்ட் ஆர்டரை காட்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பது நடக்கிறது. வேலைவாய்ப்புகள் குறித்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வரும் அரசு வேலை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஒரு போதும் நம்ப வேண்டாம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications