சவுதி அரேபியாவில் குடியேறிய சென்னை பெண்.. வாடகைக்கு குடியிருந்தவருக்கு ஜாக்பாட்.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை பெருங்குடியில் வசித்து வந்த சாரா வஹாப் என்ற இளம் பெண், கடந்த 2018ம் ஆண்டு தனது பெற்றோருடன் சவுதி அரேபியாவில் குடியேறி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ராயப்பேட்டை கவுடியா மட சாலையில் வீடுகள், கடைகள் உள்ளன. ஒரே ஒரு கடையை மட்டும் வாடகைக்கு விட்டிருந்தார். அதனை வாடகைக்கு எடுத்தவர்கள், போலி ஆவணங்கள் மூலம் , வீடு கடைகளை அபகரிக்க முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள், பணி நிமர்த்தம் காரணமாக வெளிநாடுகளில் சென்னை வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய சொத்துக்களை, பாதுகாப்பதற்காக சிலரை நியமிக்கிறார்கள். சிலர் யாரையும் நியமிப்பது இல்லை.. அவர்களுடைய சொத்துக்களை, அங்கு வாடகைக்கு குடியிருக்கும் சிலரே அபகரித்துக் கொள்ளும் திட்டத்தில் செயல்படுகிறார்கள்.

சற்று ஏமாளிகளாக இருந்தால், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொத்துக்களை பறிகொடுக்கும் நிலை கூட வரலாம். சிலருடைய சொத்துக்களை அரசியல்வாதிகள் பறிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. சில பகுதிகளில் சொத்துக்களை ஏமாற்றி வாடகைக்கு விட்டு, அங்கு வாடகைக்கு குடியிருப்பவரே மோசடி செய்வதும் நடக்கிறது. அப்படித்தான் சென்னை ராயப்பேட்டையில் நடந்துள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வந்த 34 வயதாகும் சாரா வஹாப் என்ற பெண், 2018-ம் ஆண்டு தனது பெற்றோருடன் சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கு வசிக்கிறார். அவருக்கு சென்னை ராயப்பேட்டை கவுடியா மட சாலையில் சொந்தமாக மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் தரைதளத்தில் 3 கடைகளும், 1 மற்றும் 2-வது தளத்தில் 4 வீடுகளும் உள்ளது. இதில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த புல்லா ராவ் என்பவருக்கு 'போட்டோ ஸ்டுடியோ' நடத்துவதற்கு சாரா வஹாப் ஒரு கடையை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார்... மற்ற கடைகளும், வீடுகளையும் வாடகைக்கு விடாமல் பூட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் சாரா வஹாப் சென்னை வந்திருந்தார்.
அப்போது அவரது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள கடையில், 'போட்டோ ஸ்டுடியோ' நடத்தி வந்த புல்லா ராவ் இறந்துவிட்டதும், இந்த ஸ்டூடியோவை அவரது மகன் அசோக் நடத்தி வருவதும், அவர் போலி ஆவணங்கள் தயாரித்து, தன்னை உரிமையாளர் போல் காட்டிகொண்டு கடைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் சாரா வஹாப்க்கு தெரிய வந்தது.
இதுபற்றி அவர், அசோக்கிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு அசோக் கொலைமிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாரா வஹாப் தனது இடத்தை ஆக்கிரமித்து அபகரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அசோக் போலி ஆவணங்கள் மூலம் அவருடைய வீட்டை அபகரித்து மிரட்டல் விடுத்தது உண்மையென தெரிய வந்தது. அசோக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications