மகளாக நினைக்க வேண்டிய 15 வயது மைத்துனி.. ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த நபர் கைது
சென்னை: சென்னையில் மனைவியின் 15 வயது சகோதரியான பள்ளிச் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் ஜான் பாஷா. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜான் பாஷா மனைவியின் சகோதரி 8-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான சிறுமி அடிக்கடி சகோதரி வீட்டிற்கு வந்து செல்வார்.
சிறுமி தனது கணவர் ஜான் பாஷாவுடன் சகஜமாக பேசுவதையும், பழகுவதையும் அவரது சகோதரி தவறாக நினைக்கவில்லை. ஆனால் சிறுமியுடன் ஜான் பாஷாவிற்கு தவறான பழக்கம் ஏற்பட்டு, சிறுமியை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார்.

மருந்து கடை
இந்த நிலையில் சிறுமி பொங்கல் அன்று மருந்தகம் சென்று வருவதாக வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் செல்போன் நெட்வொர்க்கை ஆய்வு செய்தனர்.

மதுரவாயல்
அப்போது சிறுமி மதுரவாயலில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர். சிறுமி தங்கியிருந்த இடம் ஜான் பாஷாவின் அலுவலகம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 8-ம் வகுப்பு சிறுமியான தனது மனைவியின் சகோதரியிடம் மூளைச் சலவை செய்து அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

ஜான்பாஷா
மேலும் அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு அண்ணா நகர் மகளிர் போலீசாரிடம் மாற்றப்பட்டு சிறுமியை திருமணத்திற்காக கடத்தியது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜான் பாஷாவை சிறையில் அடைத்தனர்.

மைத்துனியும் மகள்தான்
பொதுவாக மைத்துனியை தனது மகளாகவே பாவிப்பதுதான் அக்காள் கணவரின் எண்ணமாக இருக்க வேண்டும். அதிலும் 13 வயது சிறுமியை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஜான்பாஷா செய்த காரியத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம்












Click it and Unblock the Notifications