சென்னை ரயிலில் பயணிகள் தூங்கிய பின் ஒடிசா நபர் செய்த காரியம்! வீடியோ வைத்து தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளிடம் இருந்து செல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடிய நபரை போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். ரயில் பயணிகள் கொஞ்சம் அசந்தாலும் அவர்களின் உடமைகளை பறிகொடுக்க வேண்டியதுதான் என்பது போல இந்த சம்பவம் அமைந்துள்ளது. ரயில்களில் கண்காணிப்பை அதிகரித்து இதுபோன்ற திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொலை தூர பயணங்களுக்கு பயணிகள் அதிகம் விரும்புவது ரயில்களைத்தான். குறைவான கட்டணம், சொகுசு, சரியான நேரத்திற்கு செல்ல முடியும் என பல வசதிகள் இருப்பதால் சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ரயில்களில் செல்வதை காண முடிகிறது. எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு நேரம் செல்லும் ரயில்களில் தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகம் பயணிப்பதை காண முடிகிறது.

சென்னை ரயிலில் டிப்டாப் ஆசாமி
தொலை தூர பயணங்கள் செய்யும் பயணிகள், பயண களைப்பில் இரவில் தூங்கும் போது அவர்களின் உடைமைகளை திருடிச்செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன. ரயிலின் ஜன்னலோரத்தில் இருக்கும் பயணிகளிடம் செல்போன் திருடுவது.. அவர்களின் விலை உயர்ந்த நகைகளை திருடிச்செல்லும் சம்பவங்கள் ஒருபக்கம் அரங்கேறி கொண்டு இருக்கின்றன.
இதேபோன்று, பயணி போலவே ரயிலுக்குள் ஏறி ஓடும் ரயிலுக்குள் பயணிகளிடம் இருக்கும் பணம், மொபைல், லேப்டாப், தங்க நகைகள் போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களையும் திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன. இப்படியான ஒரு சம்பவம்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அரங்கேறியுள்ளது.
ரயிலின் ஏசி பெட்டிக்குள் பயணிகள் தூங்கி கொண்டு இருந்த போது அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப் போன்ற பொருட்களை டிப்டாப் ஆசாமி ஒருவன் நைசாக திருடியுள்ளான். வீட்டுக்கு சென்ற பிறகு பொருட்கள் காணாமல் போனதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெளிவாக பதிவாகியிருந்தது.
பயணிகள் தூங்கிய பிறகு
பயணிகளோடு பயணிகள் போலவே ரயிலில் ஏறியுள்ள அந்த நபர், பயணிகள் அனைவரும் தூங்கிய பிறகு நைசாக இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றுகிறார். ஏசி கோச்சில் தோளில் பேக் மாட்டிக்கொண்டு சாதாரணமாக நடந்து வரும் அவர், திடீரென பயணி ஒருவரின் இருக்கையில் இருக்கும் லேப்டாப்பை கேசுவலாக எடுத்துக்கொண்டு செல்வது போல் வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஒடிசாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி பெட்டியில் செல்லும் பயணிகளை குறிவைத்து அந்த நபர் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ரயில்களில் கண்காணிப்பை அதிகரித்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம், திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications