78 வயசு தாத்தா.. "அதுக்கு" அழைத்தார்.. செங்கல்லால் அடித்தே கொன்றேன்.. இளைஞர் பரபர வாக்குமூலம்
ஓரின சேர்க்கைக்கு அழைத்த முதியவரை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: 78 வயசு தாத்தா என்னை "உறவு"க்கு அழைத்தார்.. அந்த ஆத்திரத்தில் செங்கல்லை எடுத்து அவர் மண்டையில் அடித்து கொன்று விட்டேன் என்று இளைஞர் பாஸ்கரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போரூர் அடுத்த மதனந்தபுரம் விஎன்டி அவென்யூவில் வசித்து வந்தவர் பாஸ்கரன். இவருக்கு வயது 78. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். மனைவி, மகன்களை பிரிந்து தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் இவரது உடலும் மீட்கப்பட்டது. கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகைகள், பைக்கும் திருடு போயிருந்தது.

விசாரணை
இந்த கொலையை யார் செய்தது என்று தெரியாமல் மாங்காடு போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். ஏனெனில் இந்த பகுதியில் சிசிடிவி கேமிராவும் இல்லை. வயது முதிர்ந்தவரை ஏன் கொல்ல வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது.

மன்சூர்
அப்போதுதான், பாஸ்கரனுக்கு வந்த செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் திருமுல்லைவாயலை சேர்ந்த மன்சூர் அகமது என்ற 35 வயது நபர் அடிக்கடி பாஸ்கரனிடம் பேசி உள்ளது தெரியவந்தது. அதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பாஸ்கரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசில் மன்சூர் சொன்னதாவது:

பழக்கம்
"நான் ஓட்டல் வைத்திருந்தேன். பாஸ்கரன் வீட்டில் தனியாக வசித்து வந்ததால் என் ஓட்டலுக்கு வந்து சாப்பிடுவார். அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஆனது. சில சமயம் அவரால் நடந்து வர முடியாது. அதனால் என்னை வீட்டுக்கு சாப்பாடு கொண்டு வர சொல்லுவார்.

நம்பினேன்
நான் திருமுல்லைவாயலில் புதுசா வீடு கட்டி கடன் பிரச்சனையில் இருந்தேன். அதற்கு பாஸ்கரன், மனைவி, மகன்கள் என்று எனக்கு யாருமே இல்லை, எனக்கு பணம் வந்தவுடன் உனக்கு தருகிறேன், நீ கடனை அடைத்துக் கொள் என்றார். நானும் இதை ரொம்பவும் நம்பியே இருந்தேன். சம்பவத்தன்று, பணம் வந்திருக்கிறது, வந்து வாங்கி கொண்டு போகுமாறு பாஸ்கரன் சொன்னார். நானும், வீட்டுக்கு சென்றேன்.

ஆத்திரம் வந்தது
அப்போது, என்னிடம் பாஸ்கரன் ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தினார். உறவு வெச்சிக்கிட்டாதான் பணம் தருவேன்னு சொன்னார். இதனால் ஆத்திரமான நான் வெளியே சென்று, செங்கல்லை எடுத்து வந்து பாஸ்கரன் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விட்டார். பிறகு அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டேன்.

பறிமுதல்
நகைக்காக இந்த கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த 3 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு, அவர் பைக்கையும் எடுத்துகொண்டு வீட்டை வெளியில் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டேன்" என்றார். இதையடுத்து மன்சூர் அகமதுவிடமிருந்து 2 பவுன் நகைகள், மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications