மின்சார ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மென்ட்டில் ஏறி ஆண் செய்த மோசமான செயல்.. சிக்க வைத்த பெண் யூடியூபர்
சென்னை: மின்சார ரயிலில் தனியாக இருந்த பெண்ணின் முன்பு மர்ம நபர் ஒருவர் சுய இன்பம் செய்ததை அடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண். இவர் யூடியூப் சேனலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி பணி முடிந்து கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் வீடு திரும்பி உள்ளார்.
அப்போது அந்தப் பெட்டியில் அவருடன் 3 பெண்கள் இருந்துள்ளனர். மின்சார ரயில் மீனம்பாக்கத்தை அடைந்த பொழுது சுமார் 9.40 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் பெண்கள் இருக்கும் பெட்டியில் ஏறி (ladies compartment) அமர்ந்துள்ளார்.

லேடீஸ் கம்பார்ட்மென்ட்டில் ஆண்
லேடீஸ் கம்பார்ட்மென்ட்டில் ஆண் ஏறியதால் அதிர்ச்சி அடைந்த நிலையில் சிறிது தூரம் ரயில் புறப்பட்டதும் அந்த நபர் அந்த பெண்கள் முன்பே சுய இன்பம் செய்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் யூடியூபர், தான் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்தார்.

பெண்கள் முன்பே ஆண் செய்த காரியம்
பின்னர் அந்த பெண் சப்தம் போட்டார். உடனே அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி தப்பிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பெண் யூடியூபர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். வீடியோ வைரல் ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

மீனம்பாக்கம் இளைஞர் கைது
விசாரணையின் பேரில் அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23), என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை பரங்கிமலை நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். பின்னர் யூடியூபர் வரவழைக்கப்பட்டு இந்த நபர்தான் அசிங்கமான செயலில் ஈடுபட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தினர்.

பெண்கள் கோரிக்கை
அதில் அவர் ஆமாம் என்றவுடன் லட்சுமணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போல் அசம்பாவிதங்களை தடுக்க இரவு நேரங்களில் பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் பெண் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications