ஏடிஎம்மில் நுழைந்த மர்மநபர்.. சுற்றி முற்றி பார்த்துவிட்டு செய்த "பகீர்" செயல்.. வைரலாகும் வீடியோ
சென்னை: ஏடிஎம் மையத்தில் நுழைந்த ஒருவர் ஏதோ ஏடிஎம் எந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் செல்வது போல் சென்றுவிட்டு கடைசியில் காமெடி பீஸான வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சிறிய பொருட்களாக இருந்தால் நமக்கு அது பிடித்து விட்டால் அதை எப்படியாவது "சுட்டு" விடுவது என்ற சிலரின் எண்ணமாக இருக்கும். உதாரணமாக ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையங்களில் தண்ணீர் அருந்த பெரிய டம்ளர் இருக்கும், அதை யாரும் இல்லாத நேரத்தில் சுட்டுவிடுவார்கள்.
இதற்காகவே அங்கெல்லாம் சங்கிலியுடன் டம்ளர் இணைக்கப்பட்டு அது எடுக்க முடியாதபடி ரயில்வே நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ செய்கிறது.

வீடு
வங்கி, வீடு, அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி என திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வங்கி ஏடிஎம்களிலும் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வங்கி ஏடிஎம்களில் நுழையும் மர்மநபர்கள் வங்கி ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிக ளை பார்த்துள்ளோம்.

ஏடிஎம் மையங்கள்
அது போல் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத பகல் வேலைகளில் தனியாக ஏடிஎம் மையத்திற்குள் வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்கள் பணத்தை எடுக்கும் போது பறித்து கொண்டு ஓடும் கும்பலையும் பார்த்துள்ளோம். காவலாளியை கொலை செய்து ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது என நாள்தோறும் செய்திகள் வருகின்றன.

பேரிச்சம் பழம்
இப்போது டிரென்டிங் எல்லாம் என்ன தெரியுமா, ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் வரும் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. ரஜினி சிறையில் கைதிகளிடம் எதற்காக சிறைக்கு வந்தார்கள் என கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு அண்டா திருடி பேரிச்சழம் பழம் வாங்கலாம்னு திருடினேன் மாட்டிக்கிட்டேன் என ஒரு கைதி சொல்வார்.

திருட்டு சம்பவம்
அதற்கு ரஜினியோ பேரிச்சம் பழத்தையே திருடிட வேண்டியதுதானே என்பார். அது போல் இப்போது ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடுவதற்கு பதிலாகஏடிஎம் இயந்திரத்தையே திருடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

சானிடைசர்
இது குறித்த சிசிடிவி காட்சிகள் நிறைய பார்த்துள்ளோம். அது போன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏடிஎம் மையத்திற்கு வரும் நபர் ஒருவர் முதலில் உள்ளே இருக்கும் சானிடைசரில் கைகளை சுத்தப்படுத்திக் கொள்கிறார்.

ட்விஸ்ட்
உடனே பர்சில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்து போடுகிறார். அது பிராசஸ் ஆவதற்குள் மீண்டும் ஒரு முறை சானிடைஸ் செய்கிறார். பின்னர் பணம் வருவதற்குள் சுற்றும் முற்றும் பார்க்கிறார். பார்ப்பதற்கு பகீர் என்கிறது. சானிடைசரை பற்ற வைத்து அது எரிந்தவுடன் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் செல்வார் என நினைத்த வேளையில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.

சானிடைசர்
கடைசியில் பணம் வந்ததும் அதை எடுத்து பர்சில் வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு சானிடைசரை எடுத்து தான் தோளில் மாட்டியிருந்த பைக்குள் போட்டு எடுத்துச் செல்கிறார். ஏதோ ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடிப்பது போல் பீடிகை போட்டுவிட்டு கடைசியில் சானிடைசரை திருடிச் சென்று காமெடி பீஸாகிவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications