நாய் குறைத்ததால் ரத்தக்களரியான வடசென்னை... 3 பேருக்கு கத்திக்குத்து
சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அருகே தன்னை பார்த்து நாய் குறைத்ததால் அதன் உரிமையாளரையும் அவரது 2 மகன்களையும் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் தனசேகர் என்பவர் தன்னை பார்த்து ராஜலட்சுமியின் வளர்ப்பு நாய் எப்பொழுதும் குறைத்துக்கொண்டே இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பல முறை சொல்லியும் கேட்காததால் வளர்ப்பு நாயை தனசேகர் திடீரென தாக்கியுள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் மகன் திவாகர் மற்றும் ரித்தீஷ் ஆகியோர் தனசேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற தனசேகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜலட்சுமி மற்றும் அவரது மகன் திவாகர், ரித்தீஸ் ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளார்.
காயமடைந்த திவாகரும் ரித்தீஸும் தனசேகரின் வீட்டுக்கு சென்று அவரையும் அவரது மனைவி திவ்யபாரதியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியால் வெட்டு பட்ட ராஜலட்சுமி மற்றும் அவரது மகன்கள் திவாகர், ரித்தீஸ் ஆகியோர் ராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திவாகர், ரித்தீசால் தாக்கப்பட்ட தனசேகரும் அவரது மனைவி திவ்யபாரதியும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
வீட்டு வளர்ப்பு நாய் குறைத்ததால் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தின் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications