லட்சுமியை மறக்க முடியல.. புது மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளைஞர்.. கோர்ட்டில் சரண்!
இளைஞரை கொன்ற வழக்கில் ஒருவர் சரணடைந்துள்ளார்
Recommended Video
சென்னை: காதலித்து திருமணம் செய்த இளைஞர், ஏற்கனவே தான் காதலித்த இன்னொரு பெண்ணுடன் உறவை புதுப்பித்து வளர்த்து வந்துள்ளார்.. இது கடைசியில் ஒரு கொலை வரை நடந்து முடிந்துள்ளது.
சென்னை செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் முரளி. தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.. அதே பகுதியில் வசித்து வந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்தார்.
இருவரும் வேறு வேறு சமூகம்.. முரளியை பெண் வீட்டில் ஏற்று கொள்ளவில்லை. ஆனால் காதலர்கள் 6 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். ஒரு கட்டத்தில் கவுசல்யா வீட்டில் முரளியை ஏற்று கொண்டதாகவும் தெரிகிறது.

டீ கடை
இந்த நிலையில், 2 நாளைக்கு முன்பு வழக்கம் போல் மனைவியிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பி வந்துள்ளார் முரளி. காரப்பாக்கத்தில்தான் இவருக்கு ஆபீஸ்.. அதனால் ஆபீசுக்குள் நுழைவதற்கு முன்பு, எதிரில் இருக்கும் டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

முரளி
அப்போது பைக்கில் வந்த ஒரு மர்ம நபர் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி முரளியை அழைத்து சென்றுள்ளார். பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென கத்தியை எடுத்த முரளியின் கழுத்தை அறுத்து சாய்த்தார். பிறகு பைக்கை எடுத்து கொண்டு பறந்தார். தகவலறிந்து கண்ணகி நகர் போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். பைக்கில் வந்தவர் யார் என்பதை அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவு கொண்டு விசாரித்தனர்.

திருமணம்
விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன. முரளி பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் லட்சுமி என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். 3 வருட காதல்.. பிறகு இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு லட்சுமி அரவிந்தன் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார். முரளியும் கவுசல்யாவை கல்யாணம் செய்து கொண்டார்.

அரவிந்தன்
ஒரு கட்டத்தில் பிரிந்த காதலர்கள் திரும்பவும் பேச ஆரம்பித்து விட்டனர்.. வீட்டுக்கு தெரியாமல் பழகவும் தொடங்கி விட்டனர். லட்சுமியை முரளியால் மறக்கவும் முடியவில்லை.. ஆனால் இந்த விஷயம் அரவிந்தனுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். பைக்கில் வந்து முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு போனது அரவிந்தன்தான் என்பதை உறுதி செய்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாதவரம் கோர்ட்டில் அரவிந்தன் சரண் அடைந்ததையடுத்து, ஜெயிலில் அடைக்கப்பட்டார். விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கண்ணகி நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications