என்ன செந்தில்குமார் இப்படி பண்ணிட்டீங்க..டென்ஷனில் மடிப்பாக்கம் போலீஸார்!
மதுபோதையில் மெஷினை திருடி கொண்டு ஓடியவர் கைது செய்யப்பட்டார்
சென்னை: செந்தில்குமாருக்கு இந்த மிஷின் எதுக்கு உபயோகப்படும் என்று தெரியவில்லை. தண்ணி அடித்திருக்கிறார்களா என்று போலீசார் சோதனை செய்யும் மெஷினை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். ஏனென்றால், செந்தில்குமார் அப்போது போதையில் இருந்துள்ளார்!
சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கனகராஜ். இவர் சக போலீசாருடன் ஈச்சங்காடு சிக்னலில் டிராபிக் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது பைக்கில் ஒருவர் வேகமாக வரவும் அவரை தடுத்தி நிறுத்தினர். ஆனால் அவர் போதையில் இருப்பதுபோல கனகராஜுக்கு தோன்றியது. அதனால் மது அருந்தியுள்ளார்களா என்று கண்டறியும் மெஷினில் (இ-செல்லான் மெஷின்) அந்த நபரை ஊத சொன்னார்.

ஆனால் அந்த நபரோ, மெஷினை வாங்கி ஊதி, பிறகு திரும்பவும் போலீசாரிடம் தந்தார். அப்போது அவர் கன்பார்ம் ஆக தண்ணி அடித்திருப்பது தெரிந்தது. அதனால் கனகராஜ் அந்த நபர் மீது கேஸ் புக் செய்து கொண்டிருந்தார்.
அந்த போதை ஆசாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, போலீசாரிடம் இருந்து மிஷினை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது மிஷின் கீழே விழுந்துவிட்டது. திரும்பவும் எடுத்து கொண்டு ஓடினார்.
விசாரணையில்தான் அவர் பெயர் செந்தில்குமார் என்பதும், கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து பொது சொத்தை சேதம் விளைவித்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
"என்கிட்ட எவ்ளோ தங்க நகை இருக்கு பாருங்க!" ரீல்ஸ் போட்டு பந்தா காட்டிய பெண்! ஆட்டைய போட்ட திருடர்கள் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications