”ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டலே” லேப்டாப் ஸ்கீரினில் சீல் அடித்து போலி ஆவணம்.. பரவும் வீடியோ
சென்னை: டிஜிட்டல் யுகத்திலும் போலி ஆவணங்கள் உருவாகின்றன என்பதை காட்டும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வேர்டு பைல் ஒன்றில் ஆவணம் போல தயார் செய்துவிட்டு, சீல் அச்சிடும் இடத்தை காலியாக வைத்து அந்த இடத்தில், லேப்டாப் ஸ்கிரீனில் சீல் வைத்து விடுகிறார். இதை மொபைலில் புகைப்படமாக எடுக்கும் போது அச்சு அசலாக ஒரிஜினல் ஆவணம் போலவே தெரிகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் பதிலளித்து வருகிறார்கள்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் காகித ஆவணங்களை பயன்படுத்துவது கணிசமாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். டிஜிட்டல் ஆவணங்களில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்று கருதப்பட்டாலும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வார்களே அது போல டிஜிட்டல் ஆவணத்திலும் முறைகேடு, போலி ஆவணங்கள் தயாரிப்பு போன்ற மோசடிகளும் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன.

அரசு ஆவணம் போலவே
சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டரில் ஒரு ஆவணத்தை டைப் செய்து வைத்துள்ளார். பின்னர் அதிகாரியின் கையெழுத்து இடம் மற்றும் சீல் அச்சிடப்படும் பகுதி காலியாக உள்ளது. இந்த இடத்தில் உண்மையான சீல் ஒன்றை வைத்து லேப்டாப் திரையின் மேல் பகுதியில் அச்சிடுகிறார்.
ஏற்கனவே, லேப்டாப்பில் வேர்டு பைலில் அடித்து வைத்து இருந்த ஃபைலில், சீல் அடிக்கும் இடத்திற்கு நேராக, லேப்டாப் திரையில் சீல் வைத்து விடுகிறார். பின்னர் தனது கையில் இருக்கும் மொபைல் போனில் அதை அப்படியே புகைப்படமாக எடுத்து, ஆன்லைனில் இலவசமாக கிடைக்கும் டூல்ஸ்களை பயன்படுத்தி அதை பிடிஎப் ஆக மாற்றுகிறார். மொபைலில் பிடிஎப் ஆக மாற்றப்பட்ட ஆவணத்தை அவர் காட்டும் போது அச்சு அசல் அரசு ஆவணம் போலவே அது உள்ளது.
Technology 😎😎 pic.twitter.com/x40CMP36PJ
— Vivek (@Vivekkeshwani8) June 17, 2025
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்
லேப்டாப் திரையில் அச்சிடப்பட்ட சீலும் அசல் ஆவணத்தில் இருப்பதை போலவே இருக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அந்த நபர் இந்த வீடியோவை பதிவிட்டதாக தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், போலி சான்றிதழ்களை இப்படியெல்லாம் உருவாக்க முடியும் என்பதை தெளிவாக இந்த வீடியோ காட்டுகிறது. இதை ஒரு விழிப்புணர்வாக அனைவரும் எடுத்துக்கொண்டு.
எதையும் நம்பி விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார். சில நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் ஜாலியாகவும் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ஏலே, நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சட்டலே" என்று இந்த வீடியோ குறித்து கூறியிருக்கிறார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "இதை தவறாக பலரும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டு இருக்கிறார்.
மோசடியாக பயன்படுத்த வாய்ப்பு
மற்றொரு நெட்டிசன் கூறும் போது, 'இந்த மாதிரியான டிரிக்ஸ்களை வைத்து வேலைவாய்ப்புகளுக்கோ.. பிற சான்றிதழ்களுக்கே மோசடியாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, டிஜிட்டல் ஆவணங்களை நம்பால் அசல் சான்றிதழ்களை வாங்கி உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவு காட்டுகிறது.
நல்ல வேளை இனி இப்படியான ஆவணங்களாக இருந்தால் உஷாராக இருப்பேன் என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'அவரிடம் ஸ்டேம்ப் இருந்தால், பிரிண்ட் அவுட் எடுத்து அதிலேயே சீல் அடித்து இருக்கலாமே ஏன் லேப்டாப் ஸ்கீரினை வேஸ்ட் செய்கிறார் 'என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications