சென்னை அருகே வீட்டை விட்டு ஓடி வந்த 2கே கிட்ஸ் காதல் ஜோடி.. உதவியவருக்கு 20 ஆண்டு சிறை.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு காதல் ஜோடிக்கு உதவி செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் 18 வயது நிரம்பாத பெண்ணை காதலிப்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.. ஏனெனில் சென்னை அருகே நாடோடிகள் பட பாணியில் காதல் ஜோடிக்கு உதவியவர், 20 வருடம் சிறையில் கம்பி எண்ண போகிறார்.. என்ன நடந்தது? காஞ்சிபுரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பார்ப்போம்.

இன்றைக்கு பார்த்த உடனே காதல் வருகிறது. பெண் அல்லது ஆண் ஓரளவு பார்க்க அழகாக இருந்தாலே லவ் புரோபோசல் வந்து விழுகின்றன. குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் அதிகம் பேர் காதலிப்பதாக கூறுகிறார்கள். இந்த காதல் வலையில் 18 வயதிற்கு கீழ் உள்ள பல மாணவிகள் விழுந்துவிடுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

Man who helped 2K kids run away from home near Chennai gets 20 years in prison


டீன் ஏஜ் காதல்

டீன் ஏஜ் பருவத்தில் வரும் இனக்கவர்ச்சியை காதல் என்று புரிந்து கொண்டு, பருவ வயதில் சக இளைஞர்களுடன் காதல் என்ற பெயரில் பழகுகிறார்கள். பழகும் பையனுக்கும் பெரியதாக உலகத்தை பற்றி புரிதல் இருக்காது. நன்றாக படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டு, மது அருந்திக் கொண்டு, அப்பாவின் காசில் வாகனத்தை வாங்கிகொண்டு ஊரை சுற்றி பந்தா செய்யும் இளைஞர்கள் காதலில் விழுகிறார்கள். இவர்களை நம்பி செல்லும் 18 வயது நிறைவடையாத சிறுமிகள், வீட்டை விட்டு காதலனுடன் ஓடுகிறார்கள்.

ஓடி வரும் காதல் ஜோடிகள்

எங்காவது திருப்பூருக்கோ, கோவைக்கோ, சென்னைகோ ஓடி வரும் அவர்கள் சிறிது நாள் கூலி வேலை செய்கிறார்கள். திருமணம் என்ற பெயரில் ஒன்று சேரும் அவர்கள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை புரிந்து கொண்டு வேண்டாம் என்று திரும்பவும் பெற்றோரை நோக்கி ஓடி வருகிறார்கள். சிலர் 18 வயது நிரம்பாத சிறுமியை காதலித்து அத்துமீறியதற்காக சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். அவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்களும் சேர்ந்து சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரம் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் காதல்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் காதல் என்ற பெயரில் கடத்தி சென்று தனது உறவினரான செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா ஆசிவாக்கத்தை சேர்ந்த ராஜா(22) என்பவரது வீட்டில் அடைக்கலம் புகுந்திருக்கிறான். அங்கு சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

தந்தை புகார்

சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தந்தை வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜா என்பவரையும் போலீசார் போக்சோ வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றததில் நடந்து வந்தது.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கில் அரசு சார்பாக வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார். சட்ட விரோதமாக சிறுவன், சிறுமிக்கு அடைக்கலம் அளித்த ராஜாவுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தனர். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஜெயில் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+