நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் கனமழை இருக்கும்! காற்றின் வேகம் எப்படி? பாலசந்திரன் தகவல்
சென்னை: மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் இப்போது நிலைகொண்டுள்ளது. அதாவது மாமல்லபுரத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் இப்போது நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

13ஆவது புயல்
மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னைக்கும் புதுவைக்கும் இடையே 1891 முதல் 221 வரை 12 புயல்கள் கடந்துள்ளன என்று குறிப்பிட்ட பாலசந்திரன், இப்போது கடக்கும் மாண்டஸ் புயல் சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கடக்கும் 13ஆவது புயலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீவிர கனமழை
மேலும், இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மாண்டஸ் புயல் காரணமாக இப்போது காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீட்டராக உள்ளது என்று தெரிவித்த அவர் புயல் காரணமாகக் கடலோர பகுதிகளில் கனமழை முதல் தீவிர கனமழை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் தெரிவித்தார்.

நாளை அதிகாலை
புயல் நகரும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது இன்று இரவு முதல் நாளை காலைக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று கூறிய அவர், புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு முடிவடைய நாளை அதிகாலை வரை ஆகும் என்றும் தமிழக அரசுக்கு மழை தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அளித்து வருவதாகவும் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பூங்கா
மாண்டஸ் புயல் காரணமாகச் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தால் அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பேருந்து சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications