செல்வப்பெருந்தகை - மாணிக்கம் தாகூர் இடையே வெளிப்படையாக வெடித்த மோதல்.. காங்கிரசில் என்ன நடக்கிறது?
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி நடந்தாலே காமராஜர் ஆட்சிதான் என்றும், காமராஜர் ஆட்சியா? நல்லாட்சியா? என புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கடந்த ஆண்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். கடும் போராட்டங்களுக்கு பிறகு தான் அவருக்கு இந்த பதவி கிடைத்தது. அவர் பதவியேற்று கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 2 காங்கிரஸ் எம் எல் ஏக்கள், 25 மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 27 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

டெல்லியில் முகாம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும் என்று கோரியும், அவரது நிலைப்பாடு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது, இப்படியே சென்றால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் 4 பக்கங்களுக்கு புகாரை கிரிஷ் சோடங்கரிடம் கொடுத்துள்ளனர். மேலும் அங்கேயே முகாமிட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மாணிக்கம் தாகூர் ட்வீட்
இதற்கிடையே திமுகவின் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான் என்று செல்வப்பெருந்தகை கூறியதற்கு காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவின் ஆட்சியை காமராஜரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்து ட்வீட் ஒன்று போட்டிருந்தார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்வீட் பதிவில், "பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத, படிக்காதவர் அதை மற்றவர்களுடன் ஒப்பிடுவது தவறு. அன்புத் தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அது ஒருநாள் நடக்கும்" இவ்வாறு கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை பதிலடி
இந்த நிலையில் மாணிக்கம் தாகூருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி நடந்தாலே காமராஜர் ஆட்சிதான்.. காமராஜர் ஆட்சியா? நல்லாட்சியா? என புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
மாவட்ட தலைவர்களை மாற்ற கோரிக்கை
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே செல்வப்பெருந்தகை மீது எதிர்ப்பு அலை உருவாகி வருவதற்கு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது செல்வப்பெருந்தகை பதவியேற்றதில் இருந்து மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய நினைத்ததாகவும், ஆனால் அதற்கு டெல்லி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மாவட்ட தலைவர்களை தவிர்த்து மற்ற நிர்வாகிகளை மட்டுமே இவர் மாற்றி வந்துள்ளார்.
இது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் இடையே புயலை கிளப்பியுள்ள்து. இதையடுத்து தான் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நல்லுறவில் செயல்படாமல், ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாமல் போனதற்கும் செல்வப்பெருந்தகை தான் காரணம் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications