1947ல் சுதந்திரம் பெற்றபோது இந்தியாவிலேயே இல்லாத மணிப்பூர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடி வரும் நிலையில், இன வன்முறையால் வாழ்க்கையையும், வாழ்விடத்தையும் இழந்து தவிக்கும் மணிப்பூர், சுதந்திரம் பெற்றபோது இந்தியாவிலேயே இல்லை என்பது தான் வரலாறு. மணிப்பூரின் சுதந்திர வரலாற்றை சற்று அலசுவோம்.
வெள்ளையர்கள் வருகைக்கு முன்பாக இந்தியா பல்வேறு பிரதேசங்களாக, பல்வேறு இன, மொழி, மத, கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வாழும் பல நாடுகளாக இருந்தது. பல்வேறு மன்னர்கள், பிரதேச வாரியாக ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களுக்கு இடையே படையெடுப்புகள் நடைபெற்று கலாச்சார மாறுதல்களும் ஏற்பட்டன.
ஆங்கிலேயர்கள்தான் ஒவ்வொரு பிரதேசமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பிரிட்டிஷ் இந்தியாவை அமைத்தார்கள். அப்போதும் பல்வேறு பிரதேசங்கள் அங்குள்ள மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பல தனித்தனி மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழே இருந்தன.

மணிப்பூரில் தற்போது குக்கி, மெய்தி, நாகா இன மக்கள் வாழ்ந்து வருவதைபோல், அப்போது மிட்டி என்ற இனக்குழுவை சேர்ந்தவர்கள் பள்ளத்தாக்குகள், மலைப் பகுதிகளில் அமைதியாக வாழ்ந்து வந்தன. 1600களுக்கு பிறகு மின் பன்கள் என்ற இஸ்லாமிய குழுவினர் பள்ளத்தாக்கு பகுதிகளில் குடியேறி அவர்களும் இனக்கமாக வாழத் தொடங்கினர்.
1891ல் பிரிட்டன் கட்டுப்பாட்டின் கீழ் மணிப்பூர் வந்தது. 2 வது உலகப்போரில் மணிப்பூர் போர்க்களமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றா 1947 ஆம் ஆண்டில் மகாராஜா மற்றும் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட குடியரசு நாடாக மாறியது மணிப்பூர்.
அப்போது அது இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருந்தது. அப்போது மணிப்பூர் மன்னராக இருந்த போதசந்திர சிங் அதை ஏற்கவில்லை. அவரை மேகாலயா தலைநகர் மணிப்பூருக்கு அழைத்து வந்து இந்தியா ஒன்றியத்துடன் இணைப்பதற்கு கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டாடார்.
அவர் கையெழுத்திட்டதை அடுத்து கடந்த 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஒன்றிய பகுதியாக மாறியது மணிப்பூர். அங்கு ஆட்சியில் இருந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டு, 1952 ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் ராவல் அமர் சிங் தலைமையில் இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக மணிப்பூரில் தொடர் போராட்டங்கள் வெடித்தன. அதை தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு 30 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம் அங்கு செயல்பட தொடங்கியது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து 20 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பகுதியாகவே இருந்த மணிப்பூருக்கு 1972 ஆம் ஆண்டில் மாநில அந்தஸ்தே கிடைத்தது. அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சராக முஹம்மது அலிமுதீன் பதவியேற்றார்.
மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டாலும் அம்மாநில மக்களை பெரிதும் வாட்டி வதைத்தது ASFPA எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம். மணிப்பூரில் செயல்பட்டு வந்த ஆயுதக் குழுக்களை ஒடுக்குவதாக கூறி அங்கு குவிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு படையினரால் மணிப்பூர் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கறுப்பு சட்டத்தை எதிர்த்துதான் இரோம் ஷர்மிளா சுமார் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
ஜம்மு காஷ்மீருக்கு 370 சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதைபோல், மணிப்பூருக்கு 371 சி சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது. 1971 ஆம் ஆண்டில் அந்த அந்தஸ்து கொண்டு வரப்பட்டது. மணிப்பூரை நிர்வாகம் செய்ய சுயாதீன அமைப்பு இருக்க வேண்டும் என்றும், மலைவாழ் மக்கள் பாதுகாப்புக்காக அது இருக்க வேண்டும் என அந்த அந்தஸ்து சொல்கிறது.
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இருக்கும் நிலம், விவசாயம் சார்ந்த உரிமைகள், நடைமுறைகளை மேலாண்மை செய்ய அந்த அமைப்பு உள்ளது. அப்பகுதியில் எந்த திட்டத்தை நிறைவேற்றினாலும் அந்த அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். மாவட்ட அளவில் 6 கமிட்டிகள் உள்ளன. 6 பிராந்தியங்களில் உள்ள மலை சார்ந்த பகுதிகளை, இயற்கை வளங்களை பாதுகாக்கும் அதிகாரம் பெற்றவையாக இந்த அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் அந்த பழங்குடிகளே இருக்க முடியும்.
எனவே அங்குள்ள குக்கி மற்றும் நாகா பழங்குடிகளால் மட்டுமே இந்த அமைப்பில் இருக்க முடியும். பள்ளத்தாக்கு, சமவெளிகளில் வாழும் மெய்திகளால் இருக்க முடியாது. எனவேதான் அவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை எதிர்த்து குக்கிகள் நடத்திய போராட்டத்தை அடுத்தே மெய்திகள் அவர்கள் மீது இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டார்கள்.
77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் உயரே ஏற்றப்படும் மூவர்ண கொடியை உயர பார்த்து சல்யூட் அடிக்கும் அந்த நேரம் மணிப்பூர் பயங்கரங்கள் கண் முன்னே தோன்றி கண்ணீரையும் வரவழைக்கின்றன. சாதி, மத, இன, பாலின ஒடுக்குமுறை ஒழிந்து அனைவரும் அனைத்து சுதந்திரங்களும் பெற்ற சுதந்திர தினத்தை எதிர்காலத்தில் கொண்டாடுவோம்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications