அடுத்த அதிரடி! மணிப்பூர் வன்முறையில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக திருமா! நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: மணிப்பூர் வன்முறை, பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பீரன் சிங்கிற்கு எதிராக நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரடியாக களமிறங்க உள்ளார்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு மைத்தேயி பிரிவு மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இருதரபர்புக்கும் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இரண்டரை மாதமாக வன்முறை நீடித்து வருகிறது.

இதற்கிடையே தான் 2 குக்கி இன பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று துன்புறுத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைக்கு மணிப்பூரை ஆளும் பாஜக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளன. இன்று சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்று பேசினார். இதன் தொடர்ச்சியாக தான் மதுரையில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அதன் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநில முதல்வரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் எனக்கூறியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தொல் திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மணிப்பூரில் மாநில பாஜக அரசின் ஆதரவோடு பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறி - மதவெறி வன்முறையைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் ஜூலை 24ம் தேதி (நாளை) மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் மட்டுமின்றி ஜனநாயக சக்திகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி அழைக்கிறோம்.
மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்துப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச்செல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட இழிசெயலுக்கு உலகமெங்கிலுமிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. சுமார் மூன்று மாதங்களாக பழங்குடியினருக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடிய வன்முறை வெறியாட்டம் பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி, காலத்தின் கட்டாயத்தின் பேரில் கருத்துச் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
'மணிப்பூரின் புதல்விகளுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது' என்று பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அத்தகைய நெருக்கடியை அவருக்கு அந்த பேரவலம் ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலான வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 250 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்திருக்க, பட்டப்பகலில் ஒரு பெரிய வன்முறைக் கும்பலால் குக்கி சமூகத்தைச் சார்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். தெருவில் நிர்வாண ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.
அந்தப் பேரிழிவைக் கண்டித்த அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் அந்த வன்முறைக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அந்தக் காட்சிப் பதிவு வெளியானதற்குப் பிறகு அப்படி நடந்த மேலும் பல சம்பவங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வன்முறைகள் யாவும் மணிப்பூரிலுள்ள மைத்தேயி இனப் பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படுவதாகவும், மாநில காவல்துறையின் கமாண்டோக்களும் தீவிரவாதிகளோடு சேர்ந்து பழங்குடி மக்களைப் படுகொலை செய்வதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
மணிப்பூரில் நடப்பது இரண்டு குழுக்களுக்கு இடையேயான கலவரம் அல்ல. அது திட்டமிட்ட இனக் கருவறுப்புக் கொடூரமாகும். 2002 இல் குஜராத்தில் நடந்ததுபோல இப்போது மணிப்பூரில் அரசு ஆதரவோடு ஒரு இன அழித்தொழிப்பு நடக்கிறது. 2023 மே மாதம் முதற்கொண்டே மணிப்பூரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. அதனால்தான் இந்த வீடியோ பரவுவதற்கு இவ்வளவு கால தாமதம் ஆனது என்கிறார்கள்.
ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மாநில அரசு ஏன் முன்வரவில்லை? ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் ஏன் மாநில அரசை அறிவுறுத்தவில்லை? நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்ட பெண் ஒருவரின் கணவர் 28 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். 'கார்கில் போரில் பங்குபெற்று நாட்டைக் காப்பாற்றிய என்னால் என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லையே' என அவர் கதறியது தேசத்தையே உலுக்கியுள்ளது. அது இந்த போலி தேச பக்தர்களுக்கு மட்டும் ஏன் கேட்காமல் போய்விட்டது? என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன. மணிப்பூரைப் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத் தெரிந்துவிடாமல் தடுத்துக்கொண்டே அங்கே எவ்விதத் தடையுமில்லாமல் தாக்குதல் நடத்த அனுமதித்திருக்கிறது மணிப்பூர் பாஜக அரசு.
'மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும். அந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்' என்ற எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை மோடி அரசு ஏற்க மறுக்கிறது. நாடாளுமன்ற இரு அவைகளையும் நடத்திடாமல் தள்ளி வைக்கிறது. மதப் பெரும்பான்மை வாதத்தை வாக்குகளைத் திரட்டுவதற்கான உத்தியாக பாஜக உள்ளிட்ட சனாதன சங்கப் பரிவாரக் கட்சிகள் கருதுகின்றன. அதனால் இன்று மணிப்பூரில் நடப்பது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடிய பேராபத்து உள்ளது. அவ்வாறு நடக்காமல் தடுப்பது நம் கடமை. அதற்காகக் குரலெழுப்பவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே மே 16 அன்று சென்னையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக மதுரையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்திய பாஜக அரசே மணிப்பூர் பழங்குடி மக்கள் மீதான இனவெறி - மதவெறித் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். இன அழித்தொழிப்பில் ஈடுபட்டுள்ள மணிப்பூர் மாநில முதல்வரை பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் கொடூரம் பற்றி விவாதிக்க அனுமதிக்க வேண்டும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்த இழிநிலை இனக் கருவறுப்புத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உடனே பதவி விலக வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications