Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு; மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவின் வித்தியாசமான கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து குழந்தைகள் ஆர்வலர்கள், அரசு, கல்வியியலாளர்கள் பல்வேறு யோசனைகள் வைக்கும் நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது வித்தியாசமான கோரிக்கையை வைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அப்துல் சமது வைத்த இந்த வித்தியாசமான கோரிக்கை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அவரை குழந்தைகள் நல ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.கொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்று முதுமொழி உண்டு. இளமையில் வறுமையினால் உரிய வாழ்க்கை மட்டுமல்ல கல்வியும் பறிபோகும். இதையெல்லாம் காலகாலமாக பல தலைவர்கள் போராடி, பல சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து வறுமை வளரும் பருவத்தை பாதிக்காமல் இருக்க அரசு இயந்திரம் மூலம் பல நல்ல சீர்த்திருத்தங்களை அமல் படுத்தினர்.

Manithaneya Makkal Katchi MLA Abdul Samad special demand on school education policies

கல்விதான் முக்கியம், சிறுவர்களை பள்ளிகளை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டும் என்று பல திட்டங்களை இதுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது இலவசக்கல்வி தொடங்கி மதிய உணவுத்திட்டம், சத்துணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள் என தற்போதுள்ள பல அரசு உதவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாணவர்களை எப்படியாவது பள்ளிக்கு வர வைக்க வேண்டும் என்பதே அரசின் தொடர் திட்டமாக இருந்து வந்துள்ளது.

காமராஜர் தொடங்கி தற்போதுள்ள முதல்வர் வரை எடுத்த, எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தமிழகம் இந்தியாவில் தனித்துவம் பெற்ற மாநிலமாக உள்ளது. ஆனாலும் பள்ளியில் பிள்ளைகள் கற்றல் சூழல் அமைதியாக இருக்கவேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. பள்ளிக்கு பாடம் படிக்க வரும் குழந்தைகள் கற்றல் சூழல் அமைதியாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

ஆனால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாக பள்ளியில் பாலியல் வன்முறை அதிகரிப்பதும், தங்கள் பாதிப்பை குழந்தைகள் வெளியில் சொல்ல முடியாத நிலை உள்ளதையும் கருத்தில்கொண்டு காலகாலமாக கல்வியாளர்களும், குழந்தைகள் நல உறுப்பினர்களும் பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வைத்து வருகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் வைத்த கோரிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

அவரின் இந்த கோரிக்கை அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. குழந்தைகள் நல ஆர்வலர்கள் அவரது கோரிக்கையை பாராட்டி வருகின்றனர்.தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்களும் அவரது கோரிக்கையை ஆதரித்துள்ளனர். அவர் வைத்த கோரிக்கைகளின் பட்டியல் பின்வருமாறு

1.தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனை களைய அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டும்.குழந்தை பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

மேலும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதனை நடைமுறைப்படுத்த கூறியுள்ளது. நமது அண்டை மாநிலங்களில் குழந்தை பாதுகாப்பு கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தி உள்ளன. எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கையை(Child Protection Policy in all Schools) உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் .

2 .நமது அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளை கலாச்சாரமாக்க அரசமைப்பு உரிமை கல்வியை (Constitution Rights Education) அனைத்துப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. அனைத்துப் பள்ளிகளிலும் முழு நேர மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

என்கிற 3 கோரிக்கைகளை வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறினால் கற்றல் இனிதாகும், இடைநிற்றல் இல்லாமல் போகும் என்கின்றனர் கல்வியாளர்கள். அவரின் இந்த கோரிக்கை பள்ளி கூடங்களில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+