திமுகவை சரமாரியாக அட்டாக் செய்யும் விஜய்.. ஒரே வரியில் செந்தில் பாலாஜி கொடுத்த பதிலடி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவை சரமாரியாக விமர்சித்து விஜய் பேசி வருகிறார். நேற்று தஞ்சையில் நடந்த சந்திப்பின் போதும் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பேசினார். இதற்கு திமுக தரப்பில் எந்த எதிர்வினையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவை விஜய் விமர்சித்து பேசிய விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கடந்த முறையை விட கூடுதல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுகவை விமர்சிக்கும் விஜய்
புதிதாக களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று அழைப்பு விடுத்து இருந்தார். இதனால் விஜயகாந்தின் தேமுதிக, காங்கிரஸ், டிடிவி தினகரன், பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்தார்.
ஆனால் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வராமல் தனித்து விடப்பட்டுள்ளார். இருப்பினும் எல்லா கூட்டத்திலும் தவெக வெற்றி பெறும் என்று கூறுவது மட்டுமின்றி திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். கரூர் வழக்கிற்கு பிறகு பாஜக என்று அவர் வார்த்தையில் வராதபடி பேசுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஆனால் ஆளும் திமுக அரசினை லிஸ்ட் போட்டு விமர்சித்து வருகிறார்கள். நேற்று தஞ்சையில் கூட திமுக ஆட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு சந்தி சிரிக்கட்டும்.. என நாங்குநேரியில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
மணல் கொள்ளை பற்றி விஜய்
இதேபோல் தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் திவாலாகும் அபாயகரம் இருப்பதாக ஐநா ரிப்போர்ட் வெளியிட்டது குறித்து திமுகவை விமர்சித்து பேசினார். இதற்கு காரணம் நிலத்தடிநீர் முறையாக பாதுக்காக்கபடாதது தான்.. என அதில் கூறியிருந்தது. மண்ணையும், மணலையும் கொள்ளை அடித்தால் பிறகு என்ன நடக்கும்?
மலைகளை முழுகினால் என்ன நடக்கும்? மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. மணல் மாஃபியா குழுக்களுக்கு ஆதரவளிப்பதே திமுக அரசு தானே.. என்றும் விமர்சித்து பேசினார். தொடர்ந்து திமுகவை மட்டுமே அட்டாக் செய்து வரும் விஜய்யை திமுகவினர் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்
இந்த நிலையில் கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியிடம் விஜய் திமுகவை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:-
எல்லா கட்சிகளும் திமுகவை பற்றி கருத்துக்கள் சொன்னால் தானே அவர்களுடையை இருப்பை காட்ட முடியும். அதிமுகவாக இருக்கட்டும், பாஜகவாக இருக்கட்டும், புதிய கட்சிகளாக இருக்கட்டும்.. அவங்க எல்லாம் திமுகவை பற்றி கருத்து சொன்னால் தான் தங்கள் கட்சிகள் இருப்பதை போன்று மக்கள் மனதில் எடுத்து செல்ல முடியும் என அவர்கள் அந்த கருத்தினை முன் வைக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
எங்களை பொறுத்தவரை யார் எந்த கருத்தினை சொல்கிறார்கள் என்பது எல்லாம் முக்கியமல்ல. திமுக இந்த முறை 200 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் இருக்கிறது, என எதிர்க்கட்சிகள் பேசியிருப்பது அவங்களுடைய ஆசை.. அவங்களே இன்னும் இறுதி பண்ணாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை தோழமை கட்சிகளையும் மரியாதையோடு நடத்தக் கூடியவர்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல.. தொடர்ந்து அவர்களோடு பயணிக்கக் கூடிய சூழ்நிலையை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே இப்படி ஒரு அரசியல் தலைவரை நாம் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு ஆளுமை மிக்க தலைவராக, தோழமை இயக்கங்களையும் அரவணைத்து, மாற்று கருத்து உடையவர்களையும் அரவணைத்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications