மன்சூர் அலிகான் பதறி போயிட்டாரு.. கூல் சுரேஷ் விடலியே.. கப்புனு அந்த பெண்ணை.. அதிர வைத்த பிரபல நடிகர்
சென்னை: பொதுவெளியில் கூல் சுரேஷ் செய்த காரியம், பலரையும் அதிரவைத்துள்ளது.. இது தொடர்பாக வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது?
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில், வில்லன், காமெடி ரோல்களில் நடித்து வருபவர் கூல் சுரேஷ்... பல வருட காலம் சினிமாவில் இருந்தாலும், சூரி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் போன்ற சமீபத்திய நடிகர்களின் வருகையால், இவரை போன்ற நடிகர்கள் வெளியே தெரியாமலேயே போய்விட்டார்கள்.. இதனால், கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது..

ஸ்பாட்டில் அசத்தல்: சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் கூல் சுரேஷ்... தனக்கென யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.. திடீரென அதில் ஸ்பாட்டுக்கே சென்று சினிமாக்களை விமர்சனம் செய்து அசத்துவார்...
முதல் நாள், முதல் காட்சிக்கே சினிமா தியேட்டர் வாசலில் நின்று விமர்சனம் தந்து, பொதுமக்களின் கவனத்தை தன்மீது குவித்து வருகிறார்.. சிம்புவின் தீவிர ரசிகரான இவர், சிம்புவை பற்றி பேசாமல் எந்த பேட்டியையும் முடித்தது கிடையாது.. இவர் ஒரு பிரபலம் என்பதால், இவர் எங்கு சென்றாலும் அங்கே ஒரு கூட்டம் கூடிவிடும்... கலகலப்பாக பேசுவார்.. ஆதங்கமாக பேசுவார் என்றாலும், தன்மீதான விளம்பரத்தை தேடிக் கொள்ளவே பேசுகிறார் என்ற விமர்சனமும் இவர்மீது இருக்கிறது..
விமர்சனம்: அப்படித்தான், "காபி வித் காதல்" படம் வெளியானபோது, முதல்நாளே படத்தை பார்க்க வந்துவிட்டார்.. வழக்கமாக படத்தை பற்றி விமர்சனம் செய்யும் கூல்சுரேஷ், திடீரென ஏன் இந்த படத்தில் தனக்கு சான்ஸ் தரவில்லை என்று, தியேட்டர் வாசலிலேயே நின்று டைரக்டருக்கு கேள்வி எழுப்பியிருந்தார்..
"ஹிட் படத்தில் கூல் சுரேஷ் நடிக்க கூடாதா? கடைசிவரை இப்படியே கேட் வாசலில் நின்று கத்தி கொண்டுதான் இருக்கணுமா? ஆமா, கத்துவேன், படத்துக்காக கத்துவேன்.. தியேட்டரில் வந்து கத்துவேன்.. கலகலகல எனக்கு வாய்ப்பு தராவிட்டால் இப்படித்தான் கத்துவேன்" என்றார்.. அத்துடன், யாரோ பக்கத்தில் நின்றிருந்த ஒரு இளம்பெண்ணையும் அலேக்காக இரு கைகளிலும் தூக்கிவிட்டார். இது அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
பகீர் காரியம்: இது ஒரு உதாரணம்தான். இதோ இப்போது ஒரு காரியத்தை செய்து சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.. மன்சூர் அலிகானின் புதிய படம் ஒன்றின் டிரெயிலர் வெளியீட்டு விழா நடந்துள்ளது..
விழாவில் கூல் சுரேஷ் பங்கேற்று, மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, தனக்கு போடப்பட்டிருந்த மாலையை எடுத்து, தனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தொகுப்பாளினிக்கு, படக்கென கழுத்தில் போட்டுவிட்டார்.. அவரது அனுமதி இல்லாமலே, அந்த மாலையை அவரது கழுத்தில் போட்டார்.
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த தொகுப்பாளினியோ, கடும் கோபம் அடைந்து, தன்னுடைய எரிச்சலையும் மேடையிலேயே வெளிப்படுத்தினார். உடனே கூல் சுரேஷ், "இங்கே எல்லாருக்கும் மாலை போட்டீங்களே.. நம்ம எல்லாரையும் வித்தியாசமான பேசி வரவேற்ற இவருக்கு மாலை போட்டோமா? என்று கேட்டார். இதையடுத்து அரங்கிற்குள் சலசலப்பு ஏற்பட துவங்கியது..
மன்சூரலிகான்: ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். பிறகு உடனடியாக மேடைக்கு வந்தார் மன்சூர் அன்லிகான்.. "கூல் சுரேஷ் செய்தது தவறு தான். நானே அதனை பார்த்து ஷாக் ஆயிட்டேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்றார் மன்சூரலிகான்.. பிறக, அங்கிருந்த கூல் சுரேஷையும் மேடையிலே மன்னிப்பு கேட்க சொன்னார். அதன்பிறகே தன்னுடைய சீட்டில் போய் உட்கார்ந்தார் மன்சூர் அலிகான்.

இறுதியில், கூல் சுரேஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம், "நானும் அந்த பெண்ணும் ஜாலியாக பேசி கொண்டிருந்தோம்" என்றார்.. ஆனால், அந்த தொகுப்பாளினியோ டக்கென, "நான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலியே" என்றார்.. இதற்கு என்ன பதில் சொல்தென்றே தெரியாமல் கூல் சுரேஷ் விழித்தார்..
மன்னிச்சுக்கோ: பிறகு வேறுவழியின்றி, தெரியாம பண்ணிட்டேன்..ம்மா, என்னை மன்னிச்சுக்கோங்க தங்கச்சி" என்றார்.. லைம்லைட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசுவதா? செய்வதா? என்று இணையவாசிகள் கேள்விகளை துளைத்து எடுத்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications