யார்னு தெரியல.. திடீர்னு கல்யாண வீட்டில் நுழைந்து.. பணம் எடுத்தார் பாருங்க மன்சூர்.. மக்கள் "ஆ"!
மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: தேர்தலில் போட்டியிட மாட்டேன்னு சொன்ன மன்சூர் அலிகான், ஓவர் நைட்டில் முடிவை மாற்றி கொண்டுவிட்டார்.. அந்த வகையில் தொண்டாமுத்தூரையே திரும்பி பார்க்க வைத்து கொண்டிருக்கிறார்.
சீமான் கட்சியில் இருந்து அதிருப்தியில் இருந்து வெளியேறிய மன்சூர் அலிகான் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். இந்த முறை கோவை தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார்.
ஆனால், தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்கதான், வேலுமணி தரப்பில் மன்சூர் அலிகானை களமிறக்கியிருப்பதாக திமுக தரப்பு சொன்னது.

தேர்தல்
இதனால்தான், திடீரென தேர்தலிலிருந்து விலகுவதாகவும், பிறகு, முடிவை சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். "பின்னே என்னங்க, எங்கே போனாலும் பாய் பணம் எவ்வளவு வாங்கனீங்க? ஓட்டை பிரிக்க வந்துட்டார் பாய்-ன்னு சொல்றாங்க" என்று புலம்பி தள்ளியவர், இப்போது தேர்தலில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

குதூகலம்
வழக்கமாக மன்சூர் அலிகான் பிரச்சாரம் என்றாலே அதுக்கு தனி மவுசுதான்.. மக்கள் குதூகலமாகிவிடுவார்கள்.. சோஷியல் மீடியாவிலோ செம கண்ட்டன்ட் காத்திருக்கு என்ற உற்சாகத்தை ஏற்படுத்துபவர். புதுபுது கெட்டப், புதுபுது யுக்திகளில் மன்சூரின் பிரச்சாரங்களை கண்டு வியந்த தமிழகம் இது.. பிரச்சாரங்களில் இது ஒரு புது பாணி என்றும் சொல்லலாம்.. இது ஒர்க் அவுட் ஆகிறதா? இல்லையா? என்பதையும் தாண்டி, மன்சூர் புது வித்தியாசமாக கையில் எடுத்துள்ளார்.. வேறு யாரும் இவர் அளவுக்கு வீதியில் இறங்கி வாக்கு கேட்டதில்லை.

மாப்பிள்ளை
இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தொண்டாமுத்தூரில் வாக்கு கேட்டு வந்திருக்கிறார்.. அதுவும் ஸ்கூட்டரில் சென்றிருக்கிறார்.. பட்டு சட்டை - வேட்டி என மாப்பிள்ளை கோலத்தில் செல்லவும், மக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள்.. டக்கென ஓடிவந்து இவரிடம் செல்பியும் எடுத்து கொண்டுள்ளனர்.

செல்பி
அந்த நேரம் பார்த்து, அந்த பகுதியில் ஒரு கல்யாணம் நடந்துள்ளது.. அந்த கல்யாணத்துக்கும் இவருக்கும் ஒரு சம்பந்தமும் இலலை.. அது யார் வீட்டு கல்யாணம் என்றுகூட தெரியாது.. ஆனால், திடீரென மண்டபத்துக்குள் நுழைந்துவிட்டார்.. மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாருமே திகைத்து போயுள்ளனர்.. மன்சூர் நேரே புதுமண தம்பதியிடம் மேடைக்கு சென்றுவிட்டார்.. அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, செல்பியும் எடுத்து கொண்டார்.

பாட்டு
மன்சூரை பார்த்ததும், அங்கு பாட்டு கச்சேரியில் இருந்தவர்கள், ஆட்டமா தேரோட்டமா பாட்டை வாசித்துள்ளனர்.. அதை கேட்டதும் எமோஷனல் ஆகிவிட்ட மன்சூர், ஒரு குட்டி டான்ஸ் போட்டார்.. அதற்கு பிறகு, அந்த பாக்கட்டில் கையை விட்டு பணம் எடுக்க போனார்.. எல்லாரும் ஆவென மன்சூரையே பார்த்தனர்.. டக்கென ஒரு 500 ரூபாய் எடுத்து, இந்தாங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்குங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அந்த 500 ரூபாயையே இசைக்கலைஞர்கள் ரொம்ப நேரமாக உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தனர்..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications