த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆன மன்சூர் அலிகான்.. அரை மணி நேரம் விசாரணை
சென்னை: மன்சூர் அலிகான் இன்று மதியம் 2.50 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகினார். அப்போது அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் த்ரிஷாவுடன் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். அந்த படத்தில் மன்சூர் அலிகான் கிளைமாக்ஸில் மட்டும் வந்து பிளாஷ்பேக்கை சொன்னார். இந்த படத்தில் ஒரே பிரேமில் த்ரிஷாவும் மன்சூரும் நடிக்கவில்லை.

இதை காமெடியாக சொல்கிறேன் என்ற ரீதியில் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மோசமாக விமர்சித்திருந்தார். இதில் குஷ்பு, ரோஜாவையும் ஆபாசமாக பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன.
இந்த நிலையில் மன்சூரின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், என்னுடன் நடிக்க அவர் விருப்பப்பட்டுக் கொண்டே இருக்கட்டும் ஆனால் இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இயக்குநர்கள் கார்த்தி சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, ரோஜா, மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பரிந்துரையின் பேரில் தாமாக முன்வந்து தமிழக டிஜிபியிடம் ஆணையம் புகார் அளித்தது.
அவர் மீது வழக்குப் பதிவு செய்து உடனே கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான காவல்துறையின் செய்தி குறிப்பு: "நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா கிருஷ்ணன் என்பவர் குறித்து கண்ணியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் விளக்கம் கேட்க விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப மகளிர் போலீஸ் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது வீட்டிற்கே நேரில் போய் சம்மன் கொடுத்தனர். அங்கு மன்சூர் அலிகான் இல்லாததால் அவருடைய மனைவியிடம் சம்மனை கொடுத்துவிட்டனர். அதில் இன்றைய தினம் அவர் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மன்சூர் அலிகான் இன்று மதியம் 2.50 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் பரவிய மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை காண்பித்து காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை மேற்கொண்டார். அபோது மன்சூர் அலிகானின் வாக்குமூலத்தை வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்துகொண்டனர்.
சுமார் 30 நிமிடம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த மன்சூர் அலிகான் நான் திரிஷா மீது அதிக மரியாதை இருப்பதாகவும், நான் அந்த நோக்கத்தில் அப்படி பேசவில்லை என்றும் பேசினார். முன்னதாக மன்சூர் அலிகான் இன்று போலீஸார் முன்பு ஆஜராகவில்லை என்றும் அவர் நாளை ஆஜராக அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
-
“நான் நாயுடு பையன்” பார்த்திபன் சர்ச்சை பேச்சு! தமிழ்நாட்டில் அப்படி பேசினீங்களே? இரட்டை வேடமா? கடும் விமர்சனம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications