சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
சென்னை: சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மன்சூர் அலிகான் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் - 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் முகாம்கள் அமைத்தும், வாக்குசாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்றும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை, வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும்.
இந்நிலையில் பிற மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வேலைக்காக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்று மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஐ,.ஆர் பணிகளை நிறுத்தும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டேன் எனக் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
"தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகள் இல்லாத மிகப்பெரிய ஆபத்து தாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டிற்கு வடமாநிலங்களில் இருந்து பிழைக்க வந்தவர்கள் பிழைக்கட்டும். சந்தோஷம், அவர்கள் எதிரிகளும் அல்ல. ஆனால், அவர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு உரிமை கொடுக்கக்கூடாது" என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காலரவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications