சர்ச்சைகள் சூழும் நேரத்தில்.. சட்டென சனாதனத்தை கையில் எடுத்த மன்சூர் அலிகான்.. பிரஸ்மீட்டில் ஆவேசம்
சென்னை: உதயநிதி சனாதனம் குறித்து அப்படி என்ன பேசிட்டாருனு இவங்க எல்லாம் விமர்சித்தாங்க என நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 4 மணி நேரத்தில் நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பை திரும்ப பெற வேண்டும். என்னை அழைத்து என்ன நடந்தது என கேட்க வேண்டும். இது தான்என் கோரிக்கை.

நான் பேசிய விஷயத்திற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னை அவதூறுப்படுத்தி வருவதற்கு அவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மான நஷ்ட வழக்கு போட்டாலும் போடுவேன். அப்படியெல்லாம் சாதாரணமாக விடமாட்டேன். இது போல் என் விஷயத்தை பெரிதாக்குவோர் யார் என்பதை அறிய எனக்கு நேரமில்லை.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். நடக்க போகுது, நாடாளுமன்றத் தேர்தல் வேறு வர போகுது! மத்தியில் பாஜக மிகப்பெரிய பித்தலாட்டம் செய்து வருகிறது.
தமிழகத்தில் கூட மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். என்னை பற்றி பேசுகிறார்களே! தம்பி உதயநிதி சனாதனத்தை பற்றி என்ன தப்பா பேசிட்டாரு. அவரே ஒரு இந்துதான். ஆனாலும் அவர் மீது விமர்சனம் செய்தார்களே! உதயநிதி ஒரு வார்த்தை சொன்னதை வச்சி எப்படி பிழைப்பை ஓட்டினார்கள். அப்படித்தான் என்னை வைத்தும் செய்கிறார்கள்.
குஷ்பு யாரையும் உசுப்பேற்றாமல் ரூம் போட்டு யோசிங்க. மன்சூர் அலிகான் உங்களையும் சேர்த்துத்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். தமிழக அரசியலில் ஒரு புல்லை கூட இவர்களால் பிடுங்க முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும். இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் சனாதனம் பற்றி உதயநிதி அப்படி என்ன தப்பா பேசிட்டாரு.. என நிருபர்களிடம் மன்சூர் அலிகான் ஆவேசப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications