தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்! ஊர் நியாயம் பேசினா போதுமா?.. நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: குடியரசு தினத்தையொட்டி நடிகர் மன்சூர் அலிகான் தனது அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய போது தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை முர்மு ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திறந்த ஜீப்பில் ஜெய்ப்பூர் நகரத்தை மேக்ரானுக்கு சுற்றி காட்டிய பிரதமர் மோடி, மசாலா டீ வாங்கிக் கொடுத்தார். இந்த விழாவையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தினத்தையொட்டி கல்வி நிலையங்கள், மாவட்ட அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அந்த வகையில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் தனது அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார்.
அப்போது தலைகீழாக அவர் கொடியேற்றியதை அடுத்து அருகே இருந்தவர்கள் சுட்டிக் காட்டினர். பின்னர் உடனே கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக கொடியை ஏற்றினார். அரசியல் தலைவராக இருப்பவருக்கும் மற்ற நியாயங்களை பேசும் இவருக்கும் தேசியக் கொடியை கூட சரியாக ஏற்றத் தெரியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications