மனசுக்குள் ஜில் ஜில் ஜில்.. தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டிய கனமழை! குளிர்ந்த திருச்சி, ராமநாடு
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. குறிப்பாக அதிக மழைப்பொழிவு இல்லாத திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது. மழைப்பொழிவு குறைவாக இருக்கும் ராமநாதபுரம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள தகவலில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 53 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. கடலூரில் 49 மில்லி மீட்டர் மழையும், புதுச்சேரியில் 43 மில்லி மீட்டர் மழையும், மதுரையில் 34 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
அதேபோன்று கொடைக்கானலில் 29 மில்லி மீட்டர் மழையும் திருச்சியில் 24 மில்லி மீட்டர் மழையும், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 20 மில்லி மீட்டர் மழையும், நாகப்பட்டினத்தில் 16 மில்லி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 15 மில்லி மீட்டர் மழையும் கொட்டியுள்ளது.
சென்னையில் சுற்றுவட்டார பகுதிகளில் ஓரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. காஞ்சிபுரம் கட்டப்பாக்கத்தில் 6 மில்லி மீட்டர் மழையும், எம்.ஆர்.சி. நகரில் 1.5 மில்லி மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 மில்லி மீட்டர் மழையும் மாதவரத்தில் 1 மில்லி மீட்டர் மழையும், நந்தனத்தில் 0.5 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்." என்று குறிப்பிட்டு இருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications