கடன் வாங்க போறீங்களா? லோன் தரும் விதிகளை.. அடியோடு மாற்ற திட்டமிடும் பைனான்ஸ் நிறுவனங்கள்!
சென்னை: கினாரா கேபிடல், லெண்டிங்காட், ஐ ஃபைனான்ஸ், அஷ்வ் ஃபைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), கட்டுப்பாடுகள் காரணமாகப் பாதுகாப்பற்ற கடன்கள் வழங்குவதைக் குறைத்துள்ளன.
சிறு வணிகங்களுக்குக் கடன் வழங்கும் இந்த நிறுவனங்கள், பாதுகாப்பற்ற கடன்களை குறைக்க முடிவு செய்துள்ளன. அதாவது பிணையம் இல்லாமல் வழங்கப்படும் பர்சனல் கடன்கள், கிரெடிட் ஸ்கோர் அதிகம் இல்லாதவர்களுக்கு இந்த கடன்கள் இனி வழங்கப்படாது.

தனிநபர், கிரெடிட் கார்டு மற்றும் சிறு வணிகக் கடன்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு மத்திய வங்கி விதித்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கினாரா கேபிடல் தனது 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பற்ற கடன் திட்டத்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிணையமில்லா கடன்கள், அடமானக் கடன்கள் அல்லது வாகனக் கடன்களை விட இயல்பாகவே அதிக ஆபத்தானவை எனக் கருதப்படுகின்றன. இதனால் கினாரா கேபிடல், லெண்டிங்காட், ஐ ஃபைனான்ஸ், அஷ்வ் ஃபைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), கட்டுப்பாடுகள் காரணமாகப் பாதுகாப்பற்ற கடன்கள் வழங்குவதைக் குறைத்துள்ளன.
லோன் விதிகள் மாற்றம்
வங்கிகள் தொடர்பான பல்வேறு முக்கியமான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வருட தொடக்கத்தில் மாற்ற உள்ளது. இதற்காக 238 பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு உள்ளது.
சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றாக, ரிசர்வ் வங்கி (RBI) வரைவு 238-ஐ வெளியிட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் அமைப்புரீதியான பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய வங்கி விதிகளை உள்ளடக்கிய விரிவான தொகுப்பாகும். லோன் கொடுப்பது தொடங்கி, இஎம்ஐ விதிகள், கிரெடிட் கார்டு விதிகள், வங்கி சேமிப்பு விதிகள் என்று பல முக்கியமான விதிகள் இதனால் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் கருத்துகளுக்காக நவம்பர் 10 வரை திறந்திருக்கும் இந்த வரைவு, அதன்பின் அமலுக்கு கொண்டு வரப்படும்.
ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் முழுவதும் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவருவதோடு, நிதி நெறிமுறைகள், மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் உரிமைகள் மீது கண்காணிப்பை நிலைநிறுத்தவும் முயல்கிறது.
வங்கிகளுக்கு ₹25,000 அபராதம்
இணையவழி மோசடி முதல் சிட் ஃபண்டுகள் வரை பல விஷயங்களை கண்காணிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இணையவழி மோசடிக்கு ஆளானவர்கள் மூன்று நாட்களுக்குள் புகார் அளிப்பதற்கான காலக்கெடுவை அறிமுகப்படுத்துவதாகும்.
இந்த காலக்கெடுவுக்குள் வங்கிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். அதேசமயம், உடனடியாக டிஜிட்டல் மோசடி வழக்குகளில் செயல்படத் தவறும் வங்கிகளுக்கு ஒரு சம்பவத்திற்கு ₹25,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்த விதி, இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளுக்கு நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் அனுமதி இல்லாத லாட்டரிகள் மற்றும் சிட் ஃபண்டுகள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் முடக்குமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், இவை மோசடி மற்றும் பணமோசடி திட்டங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications