2024 தேர்தல் களத்தில் காணாமல் போன கட்சிகள்? ’மிஸ்டர் சந்திரமௌலி’யை ஞாபகம் இருக்கா?
சென்னை: பரபரப்பான 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் எங்கே உள்ளார்கள்? அவர்களின் கட்சி எங்கே உள்ளது என்றே தெரியவில்லை.
இது தேர்தல் காலம். எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

அதிமுக அணிக்கு எந்தெந்த கட்சிகள் வரும்? பாஜக அணியில் யார் யார் இருப்பார்கள்? திமுகவின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடக்குமா? எத்தனை பேர் கட்சி விட்டு கட்சி தாவுவார்கள் எனச் செய்திக்குப் பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இவ்வளவு பரபரப்பு நடந்து கொண்டுள்ளபோது சில 'லெட்டர் பேட்' கட்சிகள் எங்கே இருக்கின்றன? அவர்களின் கட்சி செயல்பாடு என்ன? அதன் தலைவர் ஊரில் இருக்கிறாரா? எனச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குற்றாலத்தில் சீசன் தொடங்கினால், சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவார்கள். அதுபோல தேர்தல் சீசன் ஆரம்பித்தால்தான் தானும் ஒரு கட்சித் தலைவர் என்பதை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும் அளவுக்கு நல்ல தலைவர் நடிகர் கார்த்திக்.

ரொமான்ஸ், லவ், காமெடி என தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்திருந்த வெற்றி நடிகர். எந்தளவுக்கு உணர்ச்சிகரமான பாத்திரங்களைக் கொடுத்தாலும் நவரசங்களைக் காட்டி விடும் வல்லமை படைத்தவர்.
திரையில் அப்படி இருந்த கார்த்திக், அரசியல் களத்தில் இப்போது திரைமறைவில் இருக்கிறார். அவருக்கு மக்களவைத் தேர்தல் ஒன்று நடக்க இருக்கிறது என்ற செய்தியாவது தெரியுமா என்பது சந்தேகம்.
ஒரு பக்கம் விஜய் கட்சி ஆரம்பித்து வேலைகளில் இறங்கி இருக்கிறார். விரைவில் விஷால் அடுத்த எப்போது கட்சி ஆரம்பிக்கலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை என்று ஒரு புதிய தலைவர் பாஜகவின் மாநிலத் தலைவராக வந்து அதிரடி அரசியல் செய்து வருகிறார்.

இப்படி தமிழ்நாட்டு அரசியல் களம் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் போது சீனியர் அரசியல் தலைவரான நடிகர் கார்த்திக் 'டீப் திங்கிங் மோட்'டில் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது கட்சியாவது இருக்கிறதா? தொண்டர்கள் இருக்கிறார்களா? என எந்தச் செய்தியும் இல்லை.
தமிழ்நாட்டு மக்கள் பலர் கார்த்திக் ஒரு கட்சி வைத்திருந்தார் என்பதையே மறந்து போய் இருப்பார்கள்.
ஆகவே அவர் முதலில் என்ன கட்சி வைத்திருந்தார் என்பதை மக்களுக்குச் சொல்லிவிடுவோம். அவர் 2006இல் அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வந்தார்.
அதன்பிறகு அந்தக் கட்சிக்குள் தலைவர் பதவிக்கு அடிதடி நடக்கவே, கார்த்திக் ஓரங்கட்டப்பட்டார். அதற்குப் பிறகு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அங்கேயும் பிரச்சினை வெடித்தது, ஆகவே அதைக் கலைத்துவிட்டது மனித உரிமைக் காக்கும் கட்சி என ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார்.

கட்சி பெயரில்தான் மனித உரிமைக் காக்கும் கட்சி என இருந்தது. அவர் இதுவரை மனித உரிமை பற்றிய பிரச்சினைகள் வெடித்தபோது எல்லாம் ஒரு கருத்தையும் சொன்னதில்லை. ஒரு போராட்டத்தையும் செய்ததில்லை. பல தேர்தல் காலங்களில் கலைந்து போகும் மேகம் போல வந்த நடிகர் கார்த்திக்கின் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முழுமையாகக் காணாமல் போய் உள்ளது.
அதைப்போல் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளின் பிரதிநிதியாக ஒரு சில கட்சிகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது பகுஜன் சமாஜ் கட்சி. இந்தக் கட்சியைத் தொடங்கியவர் கன்ஷிராம். அதன்பின்னர் மாயாவதி தலைவரானார்.
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குச் செல்வாக்கு உள்ள கட்சியாக ஒரு காலகட்டத்திலிருந்தது. அதன் தமிழ் மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார். வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கட்சி மிகத் தீவிரமாக இயங்கி வருகிறது.
.
எஸ்.சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் 16(4A) பிரிவை நடைமுறைப்படுத்தத் தனிச் சட்டம் இயற்றத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி சமீபத்தில் போராட்டங்கள் எல்லாம் இக்கட்சி சார்பாக நடத்தப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் மோடி ஆட்சிக்கு எதிராக சில கருத்துகளை கூறி வருகிறார்.
ஆனால், இந்தக் கட்சி தமிழ்நாட்டில் யார் கூட்டணியில் உள்ளது? அவர்கள் தனித்தே நிற்கிறார்களா? தேசிய தலைவர் மாயாவதியைப் போலவே 'இந்தியா' கூட்டணியும் பாஜக கூட்டணியும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் தனித்தே உள்ளனரா? அப்படி என்றால் இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? எத்தனைத் தொகுதி என எந்தச் செய்தியும் வெளியே தெரியாமல் உள்ளது.
இதன் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வருகைக்குப் பின் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இந்தக் கட்சி ஆக்டிவ் ஆக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்தக் கட்சியின் பலம் என்ன? தேர்தல் பாதையில் இவர்களின் பலம் என்ன என்பது எல்லாம் ஒன்றுமே வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது.

அதைப் போல இந்தியக் குடியரசு கட்சி. இதன் தலைவர் செ கு தமிழரசன். இவர் ஜெயலலிதாவின் நெருக்கமான தலைவர்களில் ஒருவராகப் பல ஆண்டுகள் இருந்தார்.அதிமுக அணியில் கூட்டணி அமைத்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சமீபத்தில் இந்தக் கட்சியின் உயர்மட்ட குழு கூடி கூட்டணி குறித்து எல்லாம் விவாதித்தனர்.
ஆனால், இப்போது அதிமுக கூட்டணியில்தான் உள்ளாரா? அல்லது வேறு அணிக்கு மாறிவிட்டரா? அதிமுக அணியிலிருந்தால் இந்தக் கட்சிக்குச் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதா? பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா? என எந்தத் தகவலும் இல்லை.
தேர்தல் காலத்திலும் பரபரப்பே இல்லாமல் சைலண்ட் ஆக உள்ள கட்சிகளின் பட்டியலில் இவரது கட்சியும் இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதமே பிராமணர்களுக்காக புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டு, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்துள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர் தெரிவித்திருந்தார். அவரது கட்சியின் நிலை என்ன என்றே தெரியவில்லை.
அவரைப் போலவே அவரது கட்சியும் கவலைக்கிடமாக இருக்கிறதா? இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் யாரை ஆதரிக்கிறார்? அடுத்த தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.

இந்தத் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்? யாரை வீழ்த்த வியூகம் வகுக்க உள்ளது இவரது கட்சி ? இப்படிப் பல கேள்விகளுக்கு விடையே தெரியாமல் மர்மமாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகள் முன்னதாக 'தமிழக மக்கள் எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டது. அந்தக் கட்சி ஆரம்பித்த போது கிட்டத்தட்ட 2 ஆயிரம் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் தனிக் கொடியைக் கூட அறிமுகம் செய்தனர். இப்போது அந்த கட்சி உள்ளதா எனச் சல்லடைப் போட்டுத் தேடினாலும் காணவில்லை.
கூடங்குளம் அணுமின் போராட்டத்தின் வழியே அதிகம் அறியப்பட்டவர் சுப. உதயகுமார். அவர் 2019இல் பச்சை தமிழகம் புதிய கட்சியைத் தொடங்கினார். பாஜகவுக்கு எதிராகப் பல கருத்துகளை முன்வைத்து வந்தார்.

இப்போது அந்தக் கட்சி உள்ளதா எனத் தெரியவில்லை. பெரிய அளவில் பேச்சும் இல்லை. கட்சி உள்ளது என்றால் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை.
பாமகவில் பிரபலமாக இருந்துவந்த ராஜேஸ்வரி பிரியா கருத்து முரண்பாடு காரணமாகப் பிரிந்து வந்து 2019இல் புதிய அரசியல் கட்சி தொடங்கினார். அவரது கட்சிக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்றும் பெயர் வைத்தார். கொடி கூட அறிமுகம் செய்யப்பட்டது.
அவர் இப்போது அந்தக் கட்சியை நடத்துகிறாரா? எந்தக் கூட்டணியை ஆதரிக்கிறார் என ஒரு செய்தியையும் காணவில்லை என்பதோடு, இந்த மக்களவைத் தேர்தல் சமுத்திரத்தில் அவரது கட்சியின் படகு எங்கே மிதக்கிறது என்றே தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications