Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் ஒரே நாளில் 25 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. போனில் எல்லாமே அந்த வீடியோக்கள்.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: இன்றைக்கு அரசு வேலையில் சேர விரும்புவோர், அதற்காக குறுக்கு வழிகள் உள்ளதாக கூறும் நபர்களை நம்புகிறார்கள். அப்படி நம்புவதுடன் அவர்கள் கூறும் பணத்தையும் தருகிறார்கள். அப்படித்தான் கன்னியாகுமரி இளம் பெண் ஒருவர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியவருககு ரூ.25 லட்சம் மற்றும் நகைகளை தந்துள்ளார்கள். அவர் வழக்கம் போல் ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இறுதியாக போலீசார் ஏமாற்றிய ஆசாமியை கைது செய்தனர்.

தமிழக அரசு வேலை என்றும் மத்திய அரசு வேலை என்றும் கூறி சில இடைத்தரகர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற்றுவது என்பது இன்னும் தொடர்கிறது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும், மக்கள் ஏமாறுகிறார்கள். ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை மக்கள் ஏமாறுவதும் தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Many videos on the cell phone of a young man who earned 25 lakhs in a single day in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பட்டதாரி பெண். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார்.

இந்தநிலையில் பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த 37 வயதாகும் பிரபாகரன் என்பவர் அறிமுகமானார். அவர் பெண்ணின் தந்தையிடம், 'நான் ரயில்வேயில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். ரூ.25 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன்' என ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய பெண்ணின் தந்தை மகளுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பிரபாகரனின் வங்கி கணக்குக்கு பல தவணையாக ரூ.25 லட்சம் அனுப்பினார். ஆனால் மீண்டும் பணம் தேவைப்படுகிறது என்று பிரபாகரன் கேட்டார். இதையடுத்து பெண்ணின் தந்தை 5 பவுன் நகையும் கொடுத்தார். இவ்வாறு பணம், நகை கொடுத்து ஒரு ஆண்டு கடந்த பின்பும் பிரபாகரன் வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்ணின் தந்தை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலிடம் புகார் கொடுத்தார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆரவாய்மொழி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து பிரபாகரனை தேடி வந்தனர். இந்தநிலையில் அரக்கோணத்தில் பதுங்கி இருந்த பிரபாகரனை கைது செய்து ஆரல்வாய்மொழிக்கு அழைத்து வந்தார்கள்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பட்டதாரி பெண்ணின் சகோதரர் அரக்கோணம் பகுதியில் வழிதெரியாமல் சுற்றி திரிந்திருக்கிறார். அவரை பிரபாகரன் மீட்டு பெண்ணின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். இதன்மூலம்தான் இவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் பிரபாகரனின் செல்போனை வாங்கி ஆய்வு செய்த போது அதில் பல பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவர் வேலை வாங்கி தருவதாக பல இளம் பெண்களை வரவழைத்து ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்ததாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+