இது லிஸ்டுலேயே இல்லையே.. மாணவிகளை கூட விட்டுவைக்காத நிகிதா.. மேஜையில் இருந்த அந்த பைல்.. பின்னணி
சென்னை: அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிகிதா மீது ஏற்கனவே பல மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றிய போது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டே அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தாவரவியல் துறைத் தலைவராக பணியாற்றிய நிகிதா, தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றவில்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி மாணவிகள் அளித்த மனுக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் இதுகுறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

விசாரணைக்கு பின், இணை இயக்குனர் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, கல்லூரி கல்வி இயக்குனருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அந்த பைல் பல நாட்களாக மேஜையில் உறங்குவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிகிதா மீது புகார்
இளைஞர் அஜித் குமார் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் அது வாக்குவாதம் ஆகி, இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடரும் புகார்கள்
நிகிதா, 2010ஆம் ஆண்டில் துணை முதல்வரின் உதவியாளரைத் தனக்குத் தெரியும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நிகிதாவின் குடும்பத்தினர் அவர்களை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட, நிகிதா குடும்பத்தினரிடம் மோசடி செய்த எங்களது பணத்தை திருப்பித் தர வேண்டும் என கேட்டோம். ஆனால் அப்போதும் எங்களை நிகிதா குடும்பம் மிரட்டியது. நிகிதாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் நீதி வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications