சென்னை திருத்தணி ரயிலில் நடந்தது அரக்கத்தனம்.. சாதி, மத, தாதாயிச கோமாளித்தனம்.. மாரி செல்வராஜ் பதிவு
சென்னை: சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை - திருத்தணி மின்சார ரயிலில், போதையில் மிதந்த நான்கு சிறுவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கி, அந்த கொடூரத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட பதிவில், "சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எடப்பாடி கண்டனம்
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே?
மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் ஸ்டாலின் அவர்களே.. கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்"இவ்வாறு கூறியுள்ளார்.
வேல்முருகன் கண்டனம்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டிருந்த பதிவில், "திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்! தமிழ்நாடு காவல்துறை,மெத்தனம் காட்டுவது ஏன்?
சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி பயணம் செய்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சுராஜ் என்பவரை,திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் ஏறிய கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் அரிவாளால் மிரட்டி, பின்னர் திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வைத்துக் கொடூரமாக வெட்டியுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் இருக்கும் சிறுவர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகி, பொது இடங்களில் ஆயுதம் ஏந்தி, ஒரு மனிதனை வெட்டி வீடியோ எடுத்து வெளியிடும் அளவுக்கு துணிச்சல் பெறுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதற்கான வெளிப்படையான சாட்சிதான் இது.
தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் கட்டுப்பாடின்றி உச்சத்தை எட்டியுள்ளது. எச்சரிக்கைகளும், வலியுறுத்தல்களும்,தொடர் போராட்டங்களும் நடைபெற்றாலும், காவல்துறை செவிமடுக்காமல் மெத்தனப் போக்கை கையாள்வது மிகுந்த வேதனைக்குரியது.
ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதாகவும், திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் கடத்தலின் மையமாக மாறி வருவதாகவும், முன்னரே பலமுறைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே திருத்தணியில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது என்றால், தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பில் தோல்வி அடைந்துள்ளது என்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் பொதுவெளிகளில் அச்சமின்றி நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக, இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்களைப் போதைப்பொருள் சுழலில் தள்ளிய கஞ்சா வியாபாரிகள், கடத்தல்காரர்கள், பின்னணியில் உள்ள சக்திகள் அனைத்தையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் மற்றும் இரயில் நிலையங்களை மையமாகக் கொண்ட கஞ்சாக் கடத்தலை முற்றாக ஒழிக்க, சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்பு சட்டங்களை மேலும் கடுமையாக்கி, நடைமுறையில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டை "போதைப்பொருள் இல்லாத மாநிலமாக" மாற்றுவதற்கானத் தெளிவான, காலக்கெடு கொண்ட செயல்திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டுமென, தமிழ்நாட்டு அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் கண்டனம்
இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது.
கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications