மாரிமுத்துக்கு அம்மா என்றால் உயிர்! அக்கா தம்பி என மொத்தம் 8 பேர்! ஊரில் பெரிய குடும்பமாம்!
சென்னை: திடீர் மாரடைப்பால் மறைந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்துக்கு அம்மா என்றால் உயிராம். சென்னையில் இருந்தாலும் அம்மாவிடம் அடிக்கடி பேசி நலம் விசாரித்துக் கொண்டே இருப்பாராம்.
தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தில் அக்கா, தம்பி என மொத்தம் 8 பேர். மாரிமுத்துவின் பெற்றோருக்கு வரிசையில் 4 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் 5வது பிறந்த ஆண் குழந்தை தான் மாரிமுத்து. தவமிருந்து பெற்றெடுத்த மூத்த மகனை கொண்டாடி வளர்த்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.

மாரிமுத்துக்கு பிறகு 3 தம்பிகள் பிறந்திருக்கிறார்கள். தற்போது மாரிமுத்துவின் 4 அக்காள்களும் ஊரில் தான் வசித்து வருகிறார்கள். அதேபோல் அவரது அம்மாவும், தம்பிகளும் ஊரில் தான் இருக்கிறார்கள். ஒரே ஒரு தம்பி மட்டும் மாரிமுத்துவுடன் அந்தக் காலத்திலேயே சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார். அவருக்கு சினிமா செட் ஆகாததால் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு இப்போது ஊர் திரும்பியுள்ளார்.
ஒரு காலத்தில் அக்கா, தம்பி என குடும்பத்தில் 8 பிள்ளைகளுடன் ஊரிலேயே பெரிய குடும்பமாக திகழ்ந்திருக்கிறது மாரிமுத்து குடும்பம். இதனிடையே தனது ஊர் குறித்தோ அக்கா, தம்பிகள், குடும்ப பிண்ணனி குறித்தோ மாரிமுத்து பெரியளவில் பேட்டிகளில் கூறியது கிடையாது.
என்னதான் சென்னையில் வசதி வாய்ப்புகள் வந்தாலும், சொந்தமாக வீடு கூட கட்டியிருந்தாலும் அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் தான் நடைபெறவுள்ளது. மாலை 3 மணியளவில் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்து உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளை தேனி மாவட்டத்தில் நடைபெறும் அவரது இறுதிச்சடங்கில் எதிர்நீச்சல் சீரியல் குழு பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications