தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்! செல்வப்பெருந்தகையை பரமக்குடிக்கு அனுப்பி வைத்த கே.எஸ்.அழகிரி!
சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்துகிறார் அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை.
அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். இது குறித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (11.9.2023) திங்கட்கிழமை காலை 11 மணியளவில், பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை ஏற்கிறார்.
கலந்துகொள்பவர்கள்:
எம்.பி. ரஞ்சன்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர்
மலேசியா பாண்டியன், பொறுப்பாளர், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
லெனின் பிரசாத், தலைவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்
ஆர்.எம். கருமாணிக்கம், எம்.எல்.ஏ.
செல்லதுரை அப்துல்லா, முன்னாள் தலைவர், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
தெய்வேந்திரன், முன்னாள் தலைவர், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
ரமேஷ் பாபு, பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
கோட்டைமுத்து
ராஜாராம் பாண்டியன்,
பாரிராஜன்
கே.ஓ.ஆர்.செந்தாமரை கண்ணன், செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
எஸ்.ஆனந்த குமார், செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
முருகானந்தம்
சரவணகாந்தி
பாக்கியராஜ்
சோ.பா.அரங்கநாதன்
சங்கை கணேசன்,
செந்தில் பாண்டியன்
செ. நிலவன்
ராஜா, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி.துறை ஒருங்கிணைப்பாளர்.












Click it and Unblock the Notifications