எடப்பாடிக்கு இரட்டை இலையா.. அவமானம், மிகப்பெரிய தண்டனை இது.. ஈரோடு நினைவிருக்கா.. பொங்கிய ஓபிஎஸ் டீம்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியின் தலைமையை யார் கைப்பற்றுவதென்கிற போட்டி உருவானது. இந்த போட்டியில் மற்றவர்களை ஓரம் கட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கட்சியை தங்கள் வசம் கொண்டுவந்தனர். அப்போது பொதுச்செயலாளர் என்கிற பதவி கிடையாது என்றும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டுமே இருக்கும் எனவும் விதிகள் திருத்தப்பட்டன.
அதன்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் எனவும் அதேநேரத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே ஒற்றை தலைமை குறித்த பிரச்னை கட்சிக்குள் தலைதூக்க தொடங்கியது. எனவே ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த மோதல் போக்கு உச்சத்தை எட்டியது.

அதாவது கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவது, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது போன்ற தீர்மானங்கள் எடப்பாடி தரப்பில் முன்மொழியப்பட்டன. ஆனால் இந்த தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மேடையிலிருந்து இறங்கி சென்றுவிட்டார். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையேயான சட்ட போராட்டங்கள் தொடங்கின. இந்த சட்ட போராட்டத்தில் நீதிமன்றம் தொடக்கத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்தாலும் அடுத்தடுத்த தீர்ப்புகள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக வந்தன.
இறுதியாக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதேபோல பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவும் அனுமதித்தது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்ற நிலையில் அவரை கட்சியின் பொதுச்செயலாளராக நீதிமன்றம் அங்கீகரித்தது. என்னதான் தீர்ப்புகள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக வந்தாலும், அவரை நீதிமன்றம் அங்கீகரித்தாலும் தேர்தல் ஆணையம் மெளனம் காத்து வந்தது ஈபிஎஸ் தரப்பினருக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தரப்பில் வேட்பாளர் ஒருவரை அறிவித்தார். தேர்தல் ஆணையம் மௌனம் கலைத்து ஈபிஎஸ்தான் பொதுச் செயலாளர் என்பதை ஏற்றுக்கொண்டால்தான் கர்நாடகாவில் எடப்பாடியாரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை பெற முடியும். எனவே தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து கட்சியில் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலும் முறையிட்டிருந்தார். இதனையடுத்து இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிப்பதாகவும், கர்நாடக தேர்தலில் அவர் அறிவித்த வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறியது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
"நீதிமன்றங்கள் தொடங்கி தேர்தல் ஆணையம் வரை எங்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த எம்ஜிஆரின் விதிகளையும், எடப்பாடியின் சதிகளையும் சரிவர உள்வாங்கிக்கொள்ளாமல் பாரபட்சமான தீர்ப்புகள் தொடர்ந்து தரப்படுகிறது. தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன். தொண்டர்களின் கருத்துகளுக்கு மாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் கூட கட்சியின் தலைமை யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மக்கள் மன்றம்தான் இறுதியான தீர்ப்பு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தேர்தல் ஆணையத்திலிருந்து இப்படி ஒரு அங்கீகாரம் வரும் என்பதை நாங்கள் எதிர்பார்த்ததுதான். இருப்பினும் நாங்கள் இதனை பின்னடைவாக எடுத்துக்கொள்ளவில்லை. எடப்பாடியிடம் இரட்டை இலை சின்னம் தரப்படுவதால், அது அவமானமாக மாறிவிடும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஈரோடு தேர்தலில் என்ன நடந்தது? டெபாசிட் வாங்குவதே சிரமமாக போய்விட்டது. நான் திருச்செந்தூர் கோயிலுக்கு போகிறேன் எனில் முருகனின் வேலை எடுத்து எனது கையில் வைத்துக்கொண்டால் நான் முருகனாகிவிட முடியுமா?
அப்படிதான் எம்ஜிஆரின் கையில் இருந்த இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த மரியாதை வேறு, ஜெயலலிதா கையில் இருந்த இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த மரியாதை வேறு.. தற்போது எடப்பாடி கையில் இருக்கும் இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த மரியாதை வேறு. மருத்துவர்கள் கையிலிருக்கும் கத்தி உயிர்களை காப்பாற்றும். ஆனால் கிரிமினல் கையில் இருக்கும் கத்தி உயிர்களை கொல்லும். ஆக எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமைக்கு உகந்தவர் அல்ல. இதனை நாங்கள் மக்கள் மன்றம் மூலம் நிரூபிப்போம்" என்று கூறியுள்ளார்.
-
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications