ஆணாதிக்க அரசியல் உலகில் தேனாதிக்கம்.. சிப்பிக்குள் முத்து! ஜெயலலிதா குறித்து மருது அழகுராஜ் உருக்கம்
சென்னை: விண்மீன்கள் நடுவாலே வீற்றிருந்த வெள்ளி நிலா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கவிதையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
விண்மீன்கள்
நடுவாலே
வீற்றிருந்த
வெள்ளிநிலா
விழிகாட்டும்
திசைஎட்டும்
கொடி நாட்டிய
வெற்றி உலா..
ஆணாதிக்க
அரசியல்
உலகில்
தேனாதிக்கம்
நடத்திய
தெய்வத் திருமகள்
இந்நாட்டு
அரசியலை
தென்னாட்டு
பக்கம்
திருப்பிக் காட்டிய
தேவதை.
கருத்தரிப்பவர்
பத்துக் குழந்தைக்கு
தாயாகலாம்
கருணை
தரிப்பவரோ
பத்துக் கோடி
தமிழர்க்கே
தாய் ஆகலாம்
என்பதை
பூவுலகிற்கே
புரிய வைத்த
புறநானூறு
சிப்பிக்குள்
தவமிருந்து
முத்துக்கள்
உதிப்பது
போல்
சங்கத் தமிழ்
பூமிக்கே
சந்தனமாய்
கரைந்திட
சங்கல்பம்
வாங்கி வந்த
சாதனைச்
சரித்திரம்..
"இதுவே
அம்மா
இருந்திருந்தா
என்னும்
ஏழு கோடி
தமிழனத்து
ஏக்கத்து
எதிரொலியில்
என்றும்
வாழ்கிறார்
எங்கள் அம்மா...
இவ்வாறு மருது அழகுராஜ் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையமோ தனது அறிக்கையில் கூறியிருப்பது வேறொன்று.

ஆறுமுகசாமி ஆணையம்
இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலிதா இறந்தது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் என்று அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஜெயலலிதா மரணமானது, ஒரு நாளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபக்
மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அவருக்கு இறுதி காரியங்களை சசிகலாவுடன் இணைந்து செய்திருந்தார். அவரிடம் ஆணையம் நடத்திய விசாரணையில் தான் தனது அத்தை ஜெயலலிதாவுக்கு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி திதி கொடுத்ததாக கூறியிருந்தார். இதையும் வைத்து டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா இறந்துவிட்டதை ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.

அரசியல் தலைவர்கள்
பொதுவாக பெரிய அரசியல் தலைவர்களோ ஆளுமைகளோ மரணமடைந்தால் அவர்களது ஆதரவாளர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த நபர் இறப்பானது இரவு நேரங்களில் அறிவிக்கப்படுவது வழக்கம். இறப்பு சம்பவம் பொதுவெளியில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் இது மாதிரியான அறிவிப்புகள் வரும். ஆனால் ஜெயலலிதா இறப்போ ஒரு நாள் பின்னராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவுநாள்
இந்த ஆணையத்தின் அறிக்கையால் ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளை அனுசரித்து வந்த அதிமுகவினர் தற்போது குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள், மூத்த நிர்வாகிகள் சிலர் இன்றைய தினமே ஜெயலலிதாவின் இறப்பு தினத்தை அனுசரித்து இரங்கல் கவிதை எழுதியுள்ளார்கள்.
-
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications