கொடநாடு கேஸ்ஸில் ஸ்டிராங்கா இருந்தாரே.. அரசியலில் இருந்து மருது அழகுராஜ் திடீர் விலகல்
சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டி கொடுத்தவர்களுக்கு நன்றி.
என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ்.

சசிகலா
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த நாளிதழ் சசிகலா தரப்பினர் கைக்கு சென்றதை அடுத்து அதிலிருந்து விலகினார். தற்போது அந்த நாளிதழை சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் நிர்வகித்து வருகிறார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைப் பொறுப்புக்கு வந்தனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ்
இதையடுத்து அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ நாளிதழ் வேண்டும் என முடிவு செய்து ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு நமது அம்மா எனும் நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழின் ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினையால் அக்கட்சி தற்போது இரு அணிகளாக பிளவை சந்தித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகல்
இதையடுத்து கடந்த ஜூன் 29ஆம் தேதி நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அழகு மருதுராஜ் விலகினார். இந்த நிலையில் இன்று அரசியலிலிருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். கொடநாடு எஸ்டேட் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டு உண்மையான குற்றவாளியை முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிக்குவார் என்று எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.

கவிதை
அதிமுகவின் 51 ஆவது நிறுவன நாள் அன்று வெள்ளை புறாவை ஓபிஎஸ் பறக்கவிடும் போட்டோவை பகிர்ந்த மருது அழகுராஜ் ஒரு கவிதையை எழுதியுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:
*சுறாவும்*
*புறாவும்* ..
சக மீன்களை
விழுங்கிப்
பிழைக்கும்..
சண்டாளச்
சுறாக்களுக்கு
புரியாது
நீ வானில்
பறக்கவிடும்
சமாதானப்
புறாக்களின்
வலிமை
என்ன
வென்று...
ஆனாலும்
தன் அடியில்
செடியை
தழைக்க
விடாத
ஆல
விருட்சத்தை
விட
கூடி வளரும் துளசிச்
செடியே
அருமருந்து
அவசியம்
என்பதை
அண்ணா
திமுக
தொண்டன்
அறிவான்..
மருது...
இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் 51 ஆவது நிறுவன நாள் அன்று வெள்ளை புறாவை ஓபிஎஸ் பறக்கவிடும் போட்டோவை பகிர்ந்த மருது அழகுராஜ் ஒரு கவிதையை எழுதியுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:
*சுறாவும்*
*புறாவும்* ..
சக மீன்களை
விழுங்கிப்
பிழைக்கும்..
சண்டாளச்
சுறாக்களுக்கு
புரியாது
நீ வானில்
பறக்கவிடும்
சமாதானப்
புறாக்களின்
வலிமை
என்ன
வென்று...
ஆனாலும்
தன் அடியில்
செடியை
தழைக்க
விடாத
ஆல
விருட்சத்தை
விட
கூடி வளரும் துளசிச்
செடியே
அருமருந்து
அவசியம்
என்பதை
அண்ணா
திமுக
தொண்டன்
அறிவான்..
மருது...
இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications