பாஜகவுக்கு எதிராக வியூகம்?.. எடப்பாடியாரே! நீங்கள் செய்வது நியாயம் இல்லை.. ஓபிஎஸ் ஆதரவாளர்
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து பேசியிருந்த நிலையில் அவர் மீது எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் அதிருப்தி ஏன் என மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்த போட்டி இரு தலைவர்களான ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி நிலவியது. இந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அளவில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
இதனால் பொதுக் குழு கூடி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அப்போது ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அது போல் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நீக்கினார். அதிமுகவில் டெல்லி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படியே எல்லாம் நடக்கும் என சொல்லப்படுகிறது. அதற்கேற்ப அதிமுக பிளவுப்பட்டு ஒன்றிணைந்த போது துணை முதல்வர் பதவியை தான் வேண்டாம் என கூறிய போது அதை ஏற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிதான் வற்புறுத்தினார் என ஓபிஎஸ் தெரிவித்திருந்ததிலிருந்தே தெரிகிறது.

அதிமுகவில் பிரச்சினை
இதனால் அதிமுகவில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் டெல்லி தலைமை முடிவுக்கு கட்டுப்பாடுவார்கள் என விமர்சிக்கப்படுகிறது. தற்போது ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடிக்கும் இடையே பிரச்சினை எழுந்த போது கூட இருவருமே பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க முயற்சித்தனர். இதில் டெல்லி தலைமையின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்குதான் என தெரிகிறது.

அதிமுக விவகாரம்
இந்த நிலையில் அதிமுக விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. தேர்தல் ஆணையம் என்ன முடிவ எடுக்கும் என தெரியவில்லை. இந்த நிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்த நிலையில் இருவரையும் அருகருகே நிற்க வைத்து பிரதமர் மோடி சந்தித்திருந்தார். அது போல் தமிழகம் வந்த அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தார். ஆனால் எடப்பாடி அவரை சந்திக்காதது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனியார் நிகழ்ச்சி
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போது தனியார் நிகழ்ச்சிக்கு சென்னை வந்த அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறினார். இதன் காரணமாக பாஜக மீது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தி எழுந்ததாக தெரிகிறது. ஓபிஎஸ்ஸுக்கே டெல்லி தலைமை முக்கியத்துவம் கொடுப்பதால் எடப்பாடி அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

நியாயமில்லை
இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் கொள்கை பரப்பு செயலாளருமான மருது அழகுராஜ், அதிமுகவை பொருத்தமட்டில் பாஜகவுடன்தான் கூட்டணி. இந்த கூட்டணியை முறித்துக் கொள்ள எந்த காரணமும் இல்லை. மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் கடந்த மாதம் சென்று எடப்பாடி சந்தித்து பேசினார், ஆனால் ஒரே மாதத்தில் அமித்ஷா மீது அதிருப்தியை வெளிப்படுத்த என்ன காரணம். எடப்பாடி பழனிசாமி அணியின் ஐடி பிரிவினர் பாஜகவை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் கருத்து வெளியிடுகிறார்கள். பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதன் பேரில் ஐடி விங் இப்படி செய்கிறதா? எதுவாக இருந்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவு செய்துவிட்ட நிலையில் இது போல் செய்வது நியாயமே இல்லை என மருது அழகுராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications