இதான் திமுக.. வந்துடுச்சு சூப்பர் அறிவிப்பு.. பஸ் பயணிகளுக்கு பறந்த சலுகைகள்.. ஆமா, அதென்ன 6வது முறை
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை துவங்கிவிட்டது.. பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, தொடர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளன.. தொடக்க பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பும் வந்துவிட்டது.
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்புகள் விரைவில் வெளியாக போகிறது.. இந்த கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லுதல், சுற்றுலாவுக்கு செல்லுதல், உறவினர் வீட்டுக்கு செல்லுதல் என்று ஏகப்பட்ட பிளான்களை இப்போதே வகுத்து வருகிறார்கள் பொதுமக்கள்.
நீண்ட நாட்கள் விடுமுறை கிடைக்க போவதால், இந்த நாட்களுக்காகவே பலரும், 2, 3, மாதங்களுக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்வார்கள்...

நெருக்கடி: பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் காலகட்டம் இது என்பதால் அரசு மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களும் அவர்களுக்கு கூடுதல் சேவையை வழங்க தயார் நிலையிலேயே இருக்கும்.. அந்தவகையில், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோத துவங்கிவிட்டன. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.. அதனால், சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அரசு பஸ்கள் காலியாக ஓடுகின்றன.. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் பஸ்களில் கூட்டம் நிரம்புகிறது... இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவும், ஆம்னி பஸ் பயணிகளை இழுக்கவும் இந்த பயண சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விரைவு பஸ்கள்: அதன்படி, அரசு விரைவு பஸ்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பயணம் செய்த பிறகு 6-வது முறை பயணத்தில் இருந்து ஒவ்வொரு பயணத்திற்கும் 50 சதவீத கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகையை சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருக்கிறார்.. அதாவது, 5 முறை பயணம் செய்வதற்கு, எந்தவிதமான சலுகையும் கிடையாது... அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும், பாதி கட்டணம் செலுத்தினால் போதுமாம். ஆனால், ஒரே இடத்திற்கு, இந்த பயணம் அமைய வேண்டும்.

உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் அங்கிருந்து சென்னை மட்டுமே வர வேண்டும்... பயணம் செய்யும் மாறாமல், ஒரே இடமாக இருந்தால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.. இடம் மாறினால் பாதி கட்டண சலுகை கிடைக்காது.. அதேபோல, எந்த பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்படுகிறதோ அதே பெயரில் தான் தொடர்ந்து ரிசர்வேஷன் செய்ய வேண்டும். பெயர்களை மாற்றினாலும் கட்டண சலுகை பெற இயலாது...
அதிரடி சலுகை: அதற்கேற்றவாறுதான் சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்டு வருகிறதாம்.. இந்த சலுகையானது, ஏசி பஸ் உட்பட எல்லா விரைவு பஸ்களுக்கும் பொருந்தும் என்றும், கோடை காலம் துவங்கிவிட்டதால், இப்போதே இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணியும் துரிதமாக நடந்து வரும்நிலையில், அடுத்த ஒருசில நாட்களில் முடிவடையும் என்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications