அப்பதான் உள்ளே நுழைந்தார் எடப்பாடி.. உடனே திமுக மாஸ் அறிவிப்பு.. "அலுவலக சாலை" பெயர் மாற போகுதாமே
சென்னை: அதிமுக தலைமையகம் உள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... அதன்படி, அவ்வை சண்முகம் சாலையை பிரித்து வி.பி.ராமன் சாலை என்று பெயர் சூட்டப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுவாக, முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகளுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்கள், நாட்டுக்காக உழைத்த தியாகிகள், பெயர்கள் சூட்டப்படுவது வழக்கம்..
தலைவர்களையும், அவர்களது பங்களிப்பையும் வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவதற்காக ஆட்சி செய்த அரசுகள் எடுத்த கொள்கை முடிவாக இது இருந்து வருகிறது.

மவுண்ட்
அப்படித்தான், 1969ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு, ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக தலைவர், கருணாநிதி, சென்னை மாநகரத்தின் பிரதான சாலையாக இருந்த மவுண்ட் ரோடுக்கு 'அண்ணா சாலை' என்று பெயர் சூட்டினார். பரங்கிமலையை வைத்துத்தான் மவுண்ட் என்கிற பெயரை வைத்து மவுண்ட் ரோடு என்றும் பெயர் இருந்தது... அதனால் சின்னமலையில் இருந்து பரங்கிமலை வரை மவுண்ட் ரோடு என்றும், சின்னமலையிலிருந்து முத்துசாமி பாலம் வரை 'அண்ணா சாலை' என்றும் கருணாநிதி பெயர் வைத்தார்.

விபி ராமன்
இன்னும் இப்படி பல சாலைகள், பல தலைவர்களின் பெயரால் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில், அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சாலையின் பெயருக்கு, புதிய பெயராக வி.பி.ராமன் சாலை என்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. யார் இந்த வி.பி.ராமன்? இவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவர் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர்.. திமுகவின் ஆரம்ப கால உறுப்பினர் ஆவார்.. 26 வயதில் திமுகவின் சட்டதிட்ட குழுவில் இருந்தார்... 1977-1979 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர்.. திமுகவின் செயற்குழுவில் இடம்பெற்றவர்..

கண்ணதாசன்
வி.பி.ராமன் வழக்கறிஞராக மட்டுமின்றி பன்முகத்தன்மையுடன் திகழ்ந்தவர்.. அதாவது, அரசியல்,சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார். கவிஞர் கண்ணதாசனுடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தவர்.. அவ்வப்போது மாலை நேரங்களில் அப்பா, வி.பி.ராமனின் இல்லத்திற்கு சென்று பேசிக் கொண்டிருப்பாராம் கண்ணதாசன்.. அதனால்தான், கண்ணதாசன் தன்னுடைய வாழ்க்கை வரலாறான வனவாசத்தில், விபி ராமனுக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பார்... வழக்கறிஞராக மட்டுமல்லாது அரசியல், சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார் விபி ராமன்... மொத்தத்தில் தமிழக வரலாற்றை தீர்மானித்த தனி மனிதர்களில் வி.பி.ராமனும் தவிர்க்க முடியாதவராக கருதப்படுகிறார்.

குஷி + பூரிப்பு
இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதாவது, அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலையின் பெயரை மாற்றி, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.. அதன்படி, அதிமுக தலைமையகம் அமைந்துள்ள பெயரான அவ்வை சண்முகம் சாலை என்பதை மாற்றி, புதிய பெயராக வி.பி.ராமன் சாலை என மாற்றப்படவிருக்கிறது. அதுமட்டுமல்ல, வி.பி.ராமனின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு அவரது பெயரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது...!!












Click it and Unblock the Notifications